Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

திருச்சியில் 12வது உலகத் தமிழ் மாநாடு!

1

திருச்சியில் 12வது உலகத் தமிழ் மாநாடு!

தமிழ் மொழியின் வளர்ச்சிக்கான திட்டங்களை வகுக்கவும், உலகெங்கும் வாழும் தமிழறிஞர்களை ஒன்றிணைக்கும் வகையிலும் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகத்தமிழ் மாநாடு நடத்த வேண்டும் என்று 1964-ம் ஆண்டு டெல்லியில் தொடங்கப்பட்ட உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தில் முடிவு செய்யப்பட்டது.

4

இதுவரை 11 உலகத் தமிழ் மாநாடுகள் நடைபெற்றுள்ளது. ஆனால் தற்போது வரை திருச்சியில் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது இல்லை.  ஆகையால் 12-வது உலகத் தமிழ் மாநாட்டை திருச்சியில் நடத்த வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர், தமிழ் ஆர்வலர்கள் வலியுறுத்து வந்தனர்.

3
2

இந்த நிலையில் திருச்சியை சேர்ந்த டாக்டர் எம்.ஏ.அலீம், முதலமைச்சருக்கு எழுதிய மனு மூலம் தற்போது பதில் கிடைந்துள்ளது. இவர் கடந்த ஏப்ரல் 1-ந்தேதி உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் துறைக்கு எழுதிய மனுவில் 12-வது உலகத் தமிழ்ச் சங்க மாநாட்டை திருச்சியில்  நடந்த அனுமதி கோரியுள்ளார்.

தற்போது தமிழ் வளர்ச்சி இயக்குனர் அந்த மனுவுக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், திருச்சியில் உலகத் தமிழ் மாநாட்டை நடத்துவதென்பது அரசின் கொள்கை முடிவாகும் என்றும் அதன் மூலம் மனுதாரரின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

அடுத்த உலகத் தமிழ் மாநாடு திருச்சியில் நடைபெறும் என்பது உறுதியாகி இருக்கிறது.

5

Leave A Reply

Your email address will not be published.