Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

நிலக்கரி உற்பத்தி 2% சரிவு

1

இந்தியாவின் மொத்த நிலக்கரி உற்பத்தி கடந்த நிதியாண்டில் 2% சரிவைச் சந்தித்துள்ளது.

2020-21-ஆவது நிதியாண்டில் மொத்த நிலக்கரி உற்பத்தி 71.61 கோடி டன், இது 2019-20-நிதியாண்டின் உற்பத்தியான 73.09 கோடி டன்னுடன் ஒப்பிடுகையில் 2% குறைவு.

4

கடந்த நிதியாண்டின்  மொத்த உற்பத்தியான 71.61 கோடி டன்னில், 67.12 கோடி டன் கோக்கிங் அல்லாத நிலக்கரி மற்றும் மீதமுள்ள 4.49 மெட்ரிக் நிலக்கரி கோக்கிங்.

3

மொத்த நிலக்கரி உற்பத்தியில், 68.6 கோடி டன் பொதுத்துறையாலும்,  மீதமுள்ள 3.01 கோடி டன் நிலக்கரியை தனியார் நிறுவனங்களாலும் உற்பத்தி செய்யப்பட்டன.

2

2020-21 நிதியாண்டில், சத்தீஸ்கா் மாநிலம்  15.84 கோடி டன்னும்,  ஒடிஸா மாநிலம் 15.41 கோடி டன்னும் அதிகளவில் நிலக்கரியை உற்பத்தி செய்துள்ளன.

மத்தியப் பிரதேசத்தின் நிலக்கரி உற்பத்தி 13.25 கோடி டன், ஜார்கண்டின் நிலக்கரி உற்பத்தி 11.93 கோடி டன்.

நாட்டின் நிலக்கரி உற்பத்தியில் கோல் இந்தியாவின் பங்கு 83.26% .

இவ்வாறு நிலக்கரித் துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

5

Leave A Reply

Your email address will not be published.