Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

திருச்சி அருகே கொட்டும் மழையில் 21 குண்டுகள் முழங்க இராணுவ வீரர் உடல் அடக்கம்!

1

திருச்சி அருகே கொட்டும் மழையில் 21 குண்டுகள் முழங்க இராணுவ வீரர் உடல் அடக்கம்!

லால்குடி அருகே நெய்குப்பை கிராமத்தை சேர்ந்தவர் ரெமி ஜூலியன் (வயது 43),  கடந்த 1999-ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்த ரெமி ஜூலியன் தற்போது என்ஜினீயரிங் ரெஜிமெண்ட் யூனிட்டில் ஹவால்தாராக பணியில் இருந்தார். இவருக்கு திருமணமாகி ஜான்சிராணி என்ற மனைவியும், ஜெனித் ஜோயல் (9) என்ற மகனும் உள்ளனர்.

4
ராணுவ வீரர் ரெமி ஜீலியன்
3
2

வழக்கம்போல் பணியில் இருந்த போது, உடல்நலக்குறைவு காரணமாக ராணுவ மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், கடந்த 19-ந் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து ரெமி ஜூலியன் குடும்பத்தினருக்கு ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

அவரது உடல் லடாக்கில் இருந்து (31.08.2022) விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் நெய்குப்பையில் உள்ள அவரது  வீட்டுக்கு நேற்று (1.09.2022)  கொண்டு வரப்பட்டு  பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இதில், ரெமி ஜூலியனுடன் பணிபுரிந்த இராணுவ வீரர்கள், கிராம மக்கள், உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து, அவரது உடல் கிறிஸ்துவ முறைப்படி ஜெயராக்கினி மாதா கோவிலில் பங்குத்தந்தை கஸ்பார், லால்குடி வட்டார முதன்மை பங்குகுரு பீட்டர் ஆரோக்கியதாஸ் ஆகியோர் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. பின்னர் இராணுவ மரியாதையுடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு 21 குண்டுகள் முழங்க கொட்டும் மழையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

 

5

Leave A Reply

Your email address will not be published.