Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

திருச்சி மண்டலத்தில் 29 டன் நெல் மூட்டைகள் பறிமுதல் 

1

திருச்சி மண்டலத்தில் 29 டன் நெல் மூட்டைகள் பறிமுதல் 

தமிழகத்தில் தற்போது குறுவை சாகுபடி செய்யப்பட்டு அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. அறுவடை செய்த நெல்லை விவசாயிகளிடமிருந்து வாங்குவதற்காக அரசு தரப்பில் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது.

4
2

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் விவசாயிகளிடம் நேரடியாகக் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் நேரடி நெல் கொள்முதல் மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு அங்கிருந்து அரவை ஆலைகளுக்கு அனுப்பப்படும்.

3

இதில்,  ஒவ்வொரு மாவட்டத்திலும் இடைத்தரகா்கள் உரிய ஆவணங்கள் இல்லாமல் நெல் மூட்டைகளை எடுத்துச் செல்வதாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையினருக்கு கிடைத்த தகவலின் பெயரில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, அரியலூா், பெரம்பலூா்,கரூா் ஆகிய 9 மாவட்ட நேரடி கொள்முதல் மையங்களில் இருந்து செல்லும் லாரிகளை சோதனை மேற்கொண்டனர்.

குடிமைப்பொருள் புலனாய்வுப் பிரிவு காவல்துறையினர் கடந்த 2 நாட்களாக  நடத்திய சோதனையில் முறையான ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட சுமாா் 29 டன் நெல் மூட்டைகளை பறிமுதல் செய்தனா்.

5

Leave A Reply

Your email address will not be published.