Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

திருச்சியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் உட்பட 3 பேர் கைது!

3

திருச்சியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் உட்பட 3 பேர் கைது!

1

திருச்சி திருவெறும்பூர் அருகே காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் உமாதேவி (38). இவர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக போலீசருக்கு கிடைத்த தகவலின் பெயரில்  இவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அச்சோதனையில் 1 கிலோ 250 கிராம் கஞ்சா பொட்டலங்கள் போலீசார் பறிமுதல் செய்து உமாதேவியை கைது செய்தனர். மேலும் திருச்சியில் உள்ள பல போலீஸ் ஸ்டேஷன்களில் உமாதேவி மீது வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது.

4

இதுபோல், திருச்சி ராம்ஜி நகர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, காந்தி நகரைச் சேர்ந்த விஸ்வநாதன், நியூ கார்ட்டூன் சேர்ந்த சேரன் ஆகியோர் விற்பனைக்காக 4 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்து இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.

2

Leave A Reply

Your email address will not be published.