
திருச்சியில் ஒரே இடத்தில் 300 வகையான பேட்டரிகள்..!
மின்கலம் (BATTERY) என்ற இயக்க சக்தி, நவீனமயமாக்கல் உலகத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாக விளங்கி வருகிறது. பேட்டரியை அடிப்படையாக வைத்து இயங்கும் இயந்திரத்தின் வாழ்நாள் காலம் என்பது பேட்டரியின் விற்பனையை பொறுத்தது என்பதால், பேட்டரிக்கான முக்கியத்துவம் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த மின்கலத்தின் மினி உலகமாக உள்ளது திருச்சி, சிங்காரத்தோப்பில் அமைந்துள்ள பரதன் பேட்டரி சென்டர். மிக அரிதாக கிடைக்கும் பேட்டரி வகைகள் உட்பட 300க்கும் மேற்பட்ட பேட்டரி வகைகள் பரதன் பேட்டரி சென்டரில் கிடைக்கிறது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பேட்டரி வாங்கிட இங்கே வருகின்றனர்.

பட்டப்படிப்பு முடித்து, 25 வருடங்களாக பேட்டரி கடை நடத்தி வரும் பரதன், வாடிக்கையாளர் கொடுக்கும் பேட்டரிகளை பார்த்தவுடனேயே அடையாளம் கண்டு சரியான பேட்டரியை எடுத்துத் தருகிறார். சிங்காரத்தோப்பு, பர்மா பஜார் கடை வரிசையில், சிறிய பரப்பளவில், எப்படி இத்தனை வகை பேட்டரிகளையும் சேகரித்து விற்கிறீர்கள் என உரிமையாளர் பரதனிடம் நாம் கேட்ட போது,
“வேறென்ன ஆர்வம் தான்! என்னுடைய வேலையில், உள்ள ஆர்வமே என்னை இந்த அளவிற்கு கொண்டு வந்திருக்கிறது. “எங்கெல்லாமோ தேடி அலைந்தேன் கிடைக்கவில்லை. ஆனால் உங்கள் கடையில் கிடைத்துவிட்டது. ரொம்பவும் மகிழ்ச்சி” என வாடிக்கையாளர்கள் கூறும் போது ஏற்படும் சந்தோஷம் தொழிலில் மேலும் மேலும் ஈடுபாட்டை அதிகரிக்கச் செய்துவிட்டது.

INVERTER, TORCH LIGHT, COMPUTER, LAPTOP. CCTV CAMERA DVR BOX BATTERIES, EMERGENCY LIGHT, CARDLESS PHONE, குழந்தைகள் விளையாடும் கார், பைக்கிற்கான பேட்டரி, தொழிற்சாலைகளில் பயன்படும் சிஎன்சி மிஷன் பேட்டரிஸ், மருத்துவத்துறையில் பயன்படும் இயந்திரங்களுக்கான பேட்டரிகள், ஹியரிங் எய்ட் பேட்டரி, அனைத்து விதமான மாடல்களுக்கும் தேவைப்படும் வாட்ச் பேட்டரிகள் உட்பட 300க்கும் மேற்பட்ட பேட்டரி வகைகள் என்னிடம் உள்ளது.
நிக்கல் கேட்மியம், நிக்கல் மெட்டலைட், லித்தியம் அயன், லித்தியம் பாலிமர் போன்ற ரிசார்ஜ் பேட்டரி வகைகளும், சிங், அல்கலைன், லித்தியம் மற்றும் நானோ, மைக்ரோ என சிறியது முதல் பெரிய அளவிலான பல்வேறு பேட்டரி வகைகளும் விற்பனைக்கு உள்ளது.
செல்போன்களில் நோக்கியோ, சாம்சங் என இரண்டு மாடல்களுக்கான பேட்டரி மட்டுமே என்னிடம் உள்ளது. ஏனென்றால் நாளுக்கு நாள் புதுப்புது செல்போன்கள், மாடல்கள் சந்தையில் வந்து கொண்டே இருக்கிறது. பலர் புதுப்புது செல்போன்களை மாற்றிக் கொண்டே இருப்பதால் பழைய செல்போன்களுக்கான பேட்டரி தங்கிவிடுகிறது. அதனால் தான் செல்போன் பேட்டரிகளில் பெரிதும் கவனம் செலுத்துவதில்லை” என்கிறார். உங்களுக்கு எந்தவிதமான பேட்டரி வேண்டும் என்றாலும் 93451 00621 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு வாங்கலாம்.!
