
கொரோனா காலக்கட்டமான 2020-21ம் நிதி ஆண்டில், சென்னையில் உள்ள ஐசிஎப் எனப்படும் ரயில் பெட்டி தொழிற்சாலை நடப்பு நிதியாண்டில் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் இயங்கும் ‘வந்தே பாரத்’ ரயில் பெட்டிகள் தயாரித்து சாதனை படைத்துள்ளது.
2021 – 2022ம் ஆண்டில் 3678 பெட்டிகள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தளவாட பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக, 3100 பெட்டிகள் என மாற்றியமைக்கப்பட்டது.


தற்போது நவீன தொழில் நுட்பமான ‘லிங் ஹாப்மென் புஸ்’ என்கிற எல்.எச்.பி. பெட்டிகள் அதிகம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டு, இலக்கைவிட 1 பெட்டி கூடுதலாக 3101 பெட்டிகள் தயாரித்து ஐ.சி.எப். சாதனை படைத்துள்ளது.
இந்தியன் ரயில்வேக்கு, 2,639 எல்.எச்.பி., பெட்டிகள் 248 மெமூ ரயில் பெட்டிகள், 50 மின்சாரம் மற்றும் டீசலில் இயங்கும் பவர் கார் ரயில் பெட்டிகள், 18 ரயில் பாதை ஆய்வு ரயில் கார் பெட்டிகள், கொல்கத்தா மெட்ரோ ரயிலுக்கு 32 பெட்டிகள், இலங்கைக்கு எக்ஸ்பிரஸ் மற்றும் டெமூ 109 ரயில் பெட்டிகள், ‘ஸ்பிக்’ நிறுவனத்துக்கு ஐந்து பெட்டிகள் என, மொத்தம் 3,101 பெட்டிகள்.
