Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

திருச்சியில் சிக்கிய மறுமுத்திரையிடாத 36 தராசுகள்

1

திருச்சியில் சிக்கிய மறுமுத்திரையிடாத 36 தராசுகள்

திருச்சி தொழிலாளர் துணை ஆய்வாளர்கள் மற்றும் முத்திரை ஆய்வாளர்களுடன், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஏ.வெங்கடேசன் தலைமையில், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் ராஜேந்திரன், கார்த்தி, பாலசுப்பிரமணியன், நூருன்னிசா, லட்சுமி ஆகியோருடன் இணைந்து சட்டமுறை எடையளவு சட்டம் 2009-ன் கீழ் திருச்சி மாநகர பகுதியில் உள்ள மீன்மார்க்கெட்,  இறைச்சிக் கடைகளில் தீடீர் கூட்டாய்வு நடத்தப்பட்டது.

4
2

இந்த ஆய்வில், 68 இறைச்சி மற்றும் மீன் கடைகளில் விற்பனைக்கு பயன்படுத்தப்படும் தராசுகளில் முத்திரை மற்றும் மறுமுத்திரையிடாத மற்றும் எடை குறைவாக நுகர்வோர் பாதிக்கப்படும் வகையில் பயன்படுத்தப்பட்ட 36 தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

3

இதுகுறித்து, திருச்சி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஏ.வெங்கடேசன்  கூறியிருப்பதாவது:-

மின்னணு தராசுகள், மேடை தராசுகள் மற்றும் நீட்டல் அளவைகள், முகத்தல் அளவைகளை பயன்படுத்துபவர்கள் உரிய காலங்களில் தங்களது பயன்பாட்டில் உள்ள எடையளவுகளை சம்பந்தப்பட்ட முத்திரை ஆய்வாளர்களிடம் சரிபார்த்து முத்திரையிட்டு கொள்ள வேண்டும். மேலும், முத்திரையிட்டதற்கான சரிபார்ப்பு சான்றிதழை நுகர்வோருக்கு பார்வைக்குபடும் படி கடைகளில் வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

5

Leave A Reply

Your email address will not be published.