Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

400 கோடி ஏலக்காய் வர்த்தகம் முடக்கம்

400 crore cardamom trade frozen

1

கேரள, இடுக்கி மாவட்டத்தில் உற்பத்தியாகும் ஏலக்காய், நறுமணப் பொருள் வாரியம் மூலம் இடுக்கி மாவட்டம் புத்தடி, தேனி மாவட்டம் போடி ஆகிய இடங்களில் தனியார் ஏல நிறுவனங்கள் வாயிலாக மின்னணு ஏல வர்த்தக முறையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.. இப்படியாக தினமும் சராசரியாக 80 ஆயிரம் கிலோ ஏலக்காய் விற்பனையாகிக்கொண்டிருந்தது.

பொதுமுடக்கத்தால் கடந்த மே 10-ஆம் தேதி முதல் ஏலக்காய் மின்னணு ஏல வர்த்தகம் நிறுத்தப்பட்டு, ஏலக்காய் தரம் பிரிப்பு கிட்டங்கிகளும் மூடப்பட்டுள்ளதால்,கடந்த ஒன்றரை மாதங்களாக மொத்தம் ரூ.400 கோடி மதிப்பிலான ஏலக்காய் வர்த்தகம் முடங்கியுள்ளதுடன், ஏலக்காய் தோட்டங்களில் பாரமரிப்பு மற்றும் பயிர்ப் பாதுகாப்புப் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

4

தேனியிலிருந்து இடுக்கி மாவட்டப் பகுதிகளுக்கு வருவோர் 72 மணி நேரத்திற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனை சான்றினை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் இடுக்கி மாவட்ட நிர்வாகம் நிபந்தனை விதித்துள்ள நிலையில் அங்கு செல்லும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு கரோனா பரிசோதனை செய்து உடனடியாக சான்றிதழ் வழங்க மாவட்ட நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகள் செய்யவில்லை.

3
2

இதனால், ஏலக்காய் தோட்டங்களில் குடியிருந்து வரும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் மட்டுமே இந்த நிபந்தனையை கடைப்பிடித்து இடுக்கி மாவட்டத்திற்குச் சென்று வர முடிகிறது. அன்றாடம் பணிக்கு சென்று வரும் சிறு விவசாயிகள், குத்தகை நில விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு கரோனா பரிசோதனை நிபந்தனையால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இடுக்கி மாவட்டத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வரும் நிலையில், ஏலக்காய் தோட்டங்களுக்குச் சென்று விவசாயப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

இந்த நிலையில் ஜூன் 21-ஆம் தேதி முதல் ஏலக்காய் மின்னணு வர்த்தகத்தை தொடங்க இடுக்கி மற்றும் தேனி மாவட்ட நிர்வாகத்திடம் நறுமணப் பொருள் வாரியம் அனுமதி கோரியுள்ளது.

72 மணி நேரத்திற்கு முன் எடுக்கப்பட்ட கரோனா சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனையில் சிறப்பு தளர்வு அளிக்க வேண்டும் என கேரள அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்  என்பதே ஏலக்காய் விவசாயிகளின் கோரிக்கை.

5

Leave A Reply

Your email address will not be published.