
25ம் தேதி முதல் சென்னையில் 630 மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி 98 %ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதில். மாநில அரசு ஊழியர்கள், மத்திய அரசு ஊழியர்கள், பொது துறை நிறுவன ஊழியர்கள், ஐகோர்ட்டு மற்றும் மற்ற கோர்ட்டு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது
பெண் பயணிகள், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எப்போது வேண்டுமானாலும் பயணிக்கலாம் என்றும், ஆண் பயணிகள் கூட்ட நெரிசல் அதிகம் இல்லாத சாதாரண நேரத்தில் மட்டும் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டது. பொதுமக்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டதால் நேற்று கடற்கரை, மூர்மார்க்கெட், எழும்பூர், நுங்கம்பாக்கம், தாம்பரம் உள்ளிட்ட அனைத்து ரெயில் நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அலை மோதியது.

10 நிமிடத்துக்கு ஒரு சேவை

5 மாதத்திற்கு பிறகு மின்சார ரெயில் சேவை முழு அளவில் தொடங்கி உள்ள நிலையில், அதில் பெண்கள், குழந்தைகளுடன் உற்சாகமாக பயணம் செய்தனர். 10 நிமிடத்திற்கு ஒரு சேவை தொடர்ந்து நேற்று இயக்கப்பட்டு வந்தது. ஆனாலும், ரெயிலில் பயணம் செய்யும் போது சமூக இடைவெளி என்பது கேள்விக்குறியாகவே இருந்தது.
இதுகுறித்து பயணிகளிடம் கருத்து கேட்டபோது:-
பஸ்சில் கூட்ட நெரிசலில் செல்லும் போது தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. தற்போது அரசு மின்சார ரெயில் சேவையை அதிகரித்து, பொதுமக்களுக்கும் அனுமதி வழங்கியிருப்பது, மகிழ்ச்சி அளிக்கிறது. இதனால் பணிக்கு செல்வோருக்கு எந்த வித போக்குவரத்து தடையும் இல்லாமல் இருக்கிறது. தொடர்ந்து மக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடித்தால் இன்னும் பாதுகாப்பாக இருக்கும்.
