Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

திருச்சியில் பட்டப்பகலில் 70 பவுன் நகை கொள்ளை!

1

திருச்சியில் பட்டப்பகலில் 70 பவுன் நகை கொள்ளை!

திருச்சி கருமண்டபம் ஆர்.எம்.எஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் நாகலெட்சுமி. இவர் ரயில்வே ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது தாயுடன் வசித்து வருகிறார்.

4
2

இவர் நேற்று பொருட்கள் வாங்குவதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். மீண்டும் வீட்டிற்கு வந்தபோது, முன்பக்ககதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.70 பவுன் நகை மற்றும் ரூ. 1 லட்சம் கொள்ளையடிக்கப் பட்டிருப்பது தெரியவந்தது.

3

இதுகுறித்து தகவல்அறிந்த வந்த போலீசார், மோப்பநாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். சிசிடிவி காட்சிகளின் படி இச்சம்வத்தில் 4 பேர் ஈடுபட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுப்பட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

5

Leave A Reply

Your email address will not be published.