
சாமி கும்பிட சென்ற பக்தர்! பணத்தை இழந்த பரிதாபம்!
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே லட்சுமணபட்டியை சேர்ந்தவர் பச்சமுத்து (50). இவர் தனது மகன் பிறந்தநாளுக்காக நேற்று (28.08.2022) குடும்பத்துடன் சமயபுரம் மாரியப்பன் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்காக சென்றுள்னார்.


இந்நிலையில், சிறப்பு கட்டண தரிசன கவுண்டரில் டிக்கெட் எடுத்து வரிசையில் நிற்ற போது, பச்சமுத்து பாக்கெட்டில் இருந்த ரூ.20 ஆயிரம் பணத்தை மர்மநபர் திருடி சென்றுள்ளார்.
இதுகுறித்து பச்சமுத்து அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
