Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

பணி ஓய்வு பெற்ற ஊழியரை தனது இருக்கையில் அமரச்செய்து கௌரவித்து  பெண் அதிகாரி

4

பணி ஓய்வு பெற்ற ஊழியரை தனது இருக்கையில் அமரச்செய்து கௌரவித்து  பெண் அதிகாரி!

3

திருச்சியில் உள்ள தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் அலுவலகத்தில், வணிகப் பிரிவு அலுவலகத்தில் கடைநிலை ஊழியராக (பதிவேடுகள் எழுத்தர்) பணிபுரிந்தவர் நாகராஜன். இவர் வாய்பேச முடியாத மாற்றுத் திறனாளி. இவர் நேற்று மாலை ஓய்வு பெற்றார்.

இதனையடுத்து நேற்று மாலை அவரது பணி ஓய்வு பிரிவு உபசார நிகழ்வு அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது  திருச்சி கோட்ட வணிக மேலாளர் மோகனப்ரியா, நாகராஜனை  தனது இருக்கையில் அமரச்செய்து மரியாதை செய்தார். அவரது குடும்பத்தினரை அவர் அருகில் நிற்கவைத்து தானும் உடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

 

உயர்அதிகாரிகள் தனக்கு கீழ் வேலை செய்பவர்கள் மதிக்காத சம்பவங்கள் நடைபெற்று வரும் இக்காலக்கட்டத்தில் தனது இருக்கையில் அமர வைத்து அழகு பார்த்த இளம் பெண் அதிகாரியின் செயல் நெகழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இப்புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவரின் செயலை பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.

2

Leave A Reply

Your email address will not be published.