
வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கடன் வழங்கும் செயல்பாடுகள் குறித்து பயிற்சி வகுப்பு!

திருச்சி மாவட்டத்தில் நேற்று (18.08.2022) வாழ்ந்து காட்டுவோம் திட்டம், இனையமானியதிட்டம் மூலம் தொழில் முனைவோர்களுக்கு 30% மானியத்துடன் கூடிய கடன் உதவி வழங்கும் பொருட்டு, வங்கி பிரதிநிதிகள் , மாவட்டபணிக்குழு வட்டாரபணிக்குழு பிரதிநிதிகளுக்கு திட்ட அறிக்கை தயாரித்தல், கடன் மதிப்பீடு, கணினி வழி செயல்பாடுகள் குறித்த ஒருநாள் பயிற்சி வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் முன்னதாக வரவேற்பு அளித்து நிகழ்வின் நோக்கத்தைக் குறித்து வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மாவட்ட செயல்அலுவலர் க.இ.ஆரோன் ஜோஸ் வாரூஸ்வெல்ட் விளக்கினார். வி.பிச்சைதிட்ட இயக்குநர் மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை தலைமையிலும், கி.ரமேஸ்குமார், திட்ட இயக்குநர் முன்னிலையிலும், ஜெ.பிரபுஜெயகுமார் மோசஸ், பொதுமேலாளர் மாவட்டதொழில் மையம் முன்னிலையிலும், எஸ்.சதீஷ்வரன் மேலாளர் மாவட்டமுன்னோடி வங்கி, கலந்து கொண்டு வாழ்துரை வழங்கினார்கள்.

மேலும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் செயல் அலுவலர் சுரேஷ்குமார் இனை மானிய திட்டம் குறித்து பயிற்சி வழங்கினார் மற்றும் பி.ஈஸ்வரன்மூர்த்தி கலந்துகொண்டு நன்றியுரை வழங்கினார்.
