Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

2021-22-ல் நெய்வேலி  என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சாதனை

4

 

என்எல்சி இந்தியா நிறுவனம், அதன் துணை மின் நிலையங்களுடன் இணைந்து கடந்த நிதியாண்டில் 2,920 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்து புதிய சாதனை படைத்தது. மேலும் மின்சக்தி விநியோகம், நிலக்கரி உற்பத்தியிலும் புதிய சாதனைகளை அந்நிறுவனம் நிகழ்த்தியுள்ளது.

என்எல்சி இந்தியா நிறுவனம் 2021-22ஆம் நிதியாண்டில் மின் உற்பத்தியில் புதிய சாதனை படைத்தது. அதன்படி, என்எல்சி மின் நிலையங்கள், அதன் துணை நிறுவனமான தூத்துக்குடி என்எல்சி, தமிழ்நாடு மின் நிறுவனத்தின் மின் நிலையம் ஆகியவை கடந்த நிதியாண்டில் 2,920 கோடி யூனிட் மின்சாரத்தை  உற்பத்தி செய்தன.

1

கடந்த 65 ஆண்டு கால வரலாற்றில் இது புதிய சாதனை. மேலும், முந்தைய 2020-21ஆம் நிதியாண்டின் மொத்த மின் உற்பத்தியைவிட இது 18.64% அதிகம்.

3

அதே போல் மின் விநியோகத்திலும் 2021-22ஆம் நிதியாண்டில், அதன் துணை மின் நிலையங்களுடன் இணைந்து 2,589 கோடி யூனிட் மின் சக்தியை மின் வாரியங்களுக்கு வழங்கியுள்ளது. இதுவும் முந்தைய 2020-21ஆம் ஆண்டில் ஏற்றுமதி செய்யப்பட்ட மின்சாரத்தை விட இது 19.75 % அதிகம்.

பசுமை மின் உற்பத்தி: 2020-21-ல் என்எல்சி நிறுவனம், சூரிய ஒளி, காற்றாலை மின் நிலையங்கள் மூலமாக 218.40 கோடி யூனிட் மின் சக்தியை உற்பத்தி செய்து புதிய சாதனை படைத்தது. இது முந்தைய 2020-21ஆம் நிதியாண்டில் மேற்கொண்ட 206.17 கோடி யூனிட் மின் உற்பத்தியை விட 5.93% அதிகமாகும்.

அதிகபட்சமாக ஒரே ஆண்டில் ரூ.419 கோடிக்கு பழுப்பு நிலக்கரியை விற்பனை செய்தும் புதிய சாதனை படைத்துள்ளது.

புதிய திட்டங்களில் முதலீடு: என்எல்சி தனது துணை நிறுவனங்களுடன் இணைந்து புதிய திட்டங்களைச் செயல்படுத்த 2021-22ஆம் ஆண்டில் ரூ.2,417 கோடியை செலவிட்டுள்ளது

நிலுவைத் தொகையில் ரூ.15,486 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது .

2

Leave A Reply

Your email address will not be published.