Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

உணவக பில்லில் சேவைக்கட்டணத்தை தடுக்க சட்டம்

1

உணவகங்கள் தங்களுடைய ‘பில்’லில், சேவை கட்டணத்தை சேர்க்க கூடாது என, அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

உணவகங்களில், வலுக்கட்டாயமாக சேவை கட்டணத்தை சேர்த்து பில் போடுவதாக, பலதரப்புகளிலிருந்தும் புகார்கள் வந்ததையடுத்து, உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சக அமைச்சர் பியுஷ் கோயல் உணவக பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியபின் கூறியதாவது:

4
2

உணவக உரிமையாளர்கள், ஊழியர்களுக்கு ஊதியத்தை அதிகரிக்க விருப்பம்  எனில், உணவு விலையை ஏற்றிக் கொள்ளலாம். அதற்கு எந்த தடையும் இல்லை. உணவுக்கான விலையையும் அவர்களே நிர்ணயித்துக் கொள்ளலாம். இதற்கு எந்த கட்டுப்பாடும் இல்லை.ஆனால், சேவை கட்டணம் எனும் பெயரில், அதை நுகர்வோரிடம் திணிப்பது சரியாகாது. உரிமையாளர்கள், ஊழியர்களுக்கான ஊதியத்தை உயர்த்திக் கொள்ளவோ, அல்லது உணவுக்கான விலையை அதிகரித்துக் கொள்ளவோ தடை எதுவும் இல்லை.

3

ஆனால், சேவையில் திருப்தி ஏற்பட்டால், நுகர்வோர் ‘டிப்ஸ்’ தருகின்றனர். அதை தொடர்வதில் ஒன்றும் இல்லை என்றார். நியாயமற்ற இந்த கட்டண வசூலிப்பை தடுக்க, உரிய சட்டம் வெளியாகும் என்றார்.

5

Leave A Reply

Your email address will not be published.