Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

திருச்சி- மலேசியா இடையே கூடுதல் விமான சேவை!

1

மலேசியா இடையே கூடுதல் விமான சேவை!

 

மலேசிய சுற்றுலா, கலை மற்றும் கலாச்சாரத்துறை, மலேசியா சுற்றுலா முகவர்கள் அமைப்பு, மற்றும் மலேசியா சுற்றுலா பணப் பரிமாற்றப்பிரிவு சார்பில் ஆகஸ்ட் 17 முதல், சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாக இந்தியாவில் 4 முக்கிய நகரங்களில் சுற்றுலா முகவர்கள் மற்றும் ஹோட்டல் நிர்வாகிகளுக்கான சிறப்பு கூட்டம் மற்றும் கண்காட்சியை நடத்தி வருகிறது.‌அந்த வகையில் நேற்று மாலை, திருச்சியில் நடைபெற்றது.

4

பின்னர் மலேசிய சுற்றுலாத்துறை துணை அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

3

கொரோனா பொதுமுடக்கத்துக்குப் பின்னர், 2022 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் மலேசியாவில் சர்வதேச போக்குவரத்துக்கு அனுமதியளிக்கபட்டுள்ளது. இதனையடுத்து  மலேசியாவுக்கான விமான சேவைகளும் அதிகரிக்கப்பட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்தியாவிலிருந்து  ஆண்டுதோறும் கோடை விடுமுறை காலங்களில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருவதை அடுத்து சிறப்பு சுற்றுலா நிகழ்வுகளும் நடைபெறும். அந்த வகையில் வரும் மே 18 முதல் 20 வரையில் சிறப்பு நிகழ்ச்சிகளை தெற்காசிய சுற்றுலா மற்றும் எக்சேஞ்சி அமைப்புகள் மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளன.

2

சுற்றுலா முகவர்கள், ஹோட்டல் நிறுவனத்தினர், விமான நிறுவனத்தினர் அமைப்புகள், சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றனர். பயணிகளுக்கு  வசதிக்காக இ-விசா முறைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பித்த ஒரு சில வாரங்களிலேயே சுற்றுலா மேற்கொள்ள முடியும்.

மலேசிய சுற்றுலாத்துறை இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில், சுற்றுலா மையத்தை அமைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. மாநிலத்தின் மத்தியில் அமைந்துள்ள திருச்சி மாநகரில் சுற்றுலா மையம் அமைப்பதின் மூலம் அனைவரும் பயன்பெறலாம் என்ற நோக்கத்தில் தமிழக அரசுடன் இணைந்து சுற்றுலா மையம் அமைக்கப்படும் என்றார்.

பின்னர் பேட்டிக் ஏர் நிறுவனத்தின் தெற்காசிய தொடர்பு தலைமை அலுவலர் சுரேஷ்வண்ணன் கூறுகையில்,

மலிண்டோ ஏர் நிறுவனம், பேட்டிக் ஏர் என்ற பெயர் மாற்றத்துடன் மீண்டும் களம் இறங்குகிறது. திருச்சிக்கு தினசரி 2 விமானங்கள் வீதம் ஏற்கெனவே இயக்கப்பட்டு வந்தது. தற்போது கொரோனா தொற்றுக்குப் பின்னர் மீண்டும் அதிகளவு விமான சேவைகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக திருச்சிக்கு வந்து செல்லும் விமானங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும் என்றார்.

இந்நிகழ்வின்போது, சபா சுற்றுலா பிரிவு அலுவலர் ஹம்ப்ரே, தென்னிந்தியா மற்றும் இலங்கை சுற்றுலா இயக்குநர் ரசைதி அப்து ரஹீம், மலேசிய சுற்றுலா முகவர்கள் சங்க துணைத் தலைவர் கணீஷ் ராமா, பேட்டிக் ஏர் நிறுவன தெற்காசிய தொடர்பு தலைமை அலுவலர் சுரேஷ்வண்ணன், மலேசியா சுற்றுலாத்துறை தொடர்பு அலுவலர் ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.

 

5

Leave A Reply

Your email address will not be published.