Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

திருச்சி மாநகரில் குற்றங்களை தடுக்க கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள்! காவல்துறை அதிரடி

1

திருச்சி மாநகரில் குற்றங்களை தடுக்க கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள்! காவல்துறை அதிரடி

திருச்சி மாநகரில் அதிகரித்து வரும் குற்றச் சம்பவங்களை தடுக்கவும் மற்றும் சாலை விதிகளை பின்பற்றாதவர்களை கண்காணிக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

4
2

இந்நிலையில், தற்போது திருச்சி மாநகர காவல் ஆணையர்  உத்தரவு படியும் திருச்சி மாநகர காவல் துறை துணை ஆணையர்  ஸ்ரீதேவி அவர்கள் அறிவுரையின்படியும் மன்னார்புரம் சர்வீஸ் ரோடு விலக்கில் குற்ற சம்பவங்களை குறைக்கவும் சந்தேக நபர்களை கண்காணிக்கவும், இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக செல்லும் நபர்கள் மற்றும் வாகன பதிவு எண் இல்லாமலும் 3 நபர்களுடன் செல்லும் நபர்களையும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க புதிதாக
3 உயர்ரக கண்காணிப்பு கேமராக்கள்  (CCTV) பொருத்தப்பட்டுள்ளது.

3

இந்த அதிநவீன கேமராக்கள் திருச்சி மாநகர நவீன காவல் கட்டுப்பாட்டு அறையுடன் 24 நேரமும் காவல்துறை அதிகாரிகள் கண்காணித்துக் கொண்டே இருக்க வசதி படுத்தப்பட்டுள்ளது.

5

Leave A Reply

Your email address will not be published.