
கிளாஸ்கோவில் நடைபெற்ற சிஓபி-26 உச்சிமாநாட்டில் கரியமிலவாயு உமிழ்வை வெகுவாகக் குறைக்க இந்தியா உறுதியளித்தது. அதனை நிறைவேற்ற மின்சார வாகனங்களைப் பயன்படுத்தவும், அதன் உற்பத்தியை அதிகரிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.
இது தொடா்பாக, நீதி ஆயோக் ஒரு வலுவான மற்றும் விரிவான மின்கலக மாற்றும் கொள்கை கட்டமைப்பை உருவாக்க கடந்த பிப்ரவரி மாதம் அமைச்சகங்கள், வாகன உற்பத்தியாளா்கள், நிதி நிறுவனங்கள், பிற துறை நிபுணா்களுடன் விரிவான ஆலோசனை நடத்தியது.


இதற்கான ஆலோசனைகள், கருத்துகளை வருகிற ஜூன் 5 -ஆம் தேதிக்குள் வழங்க பொதுமக்களை நீதி ஆயோக் கேட்டுக் கொண்டுள்ளது. போக்குவரத்து மூலம் ஏற்படு கரியமிலவாயு மாசுவைக் குறைத்து சுற்றுப்புறச்சூழலை தூய்மையானதாக்கவே மின்சார வாகனங்கள் பயன்படுத்துவதே சிறந்தது
அதன்படி, மாற்றக்கூடிய மின்கலன்கள் கொண்ட வாகனங்கள் மின்கலம் இல்லாமல் விற்கப்படும். இது மின் வாகன உரிமையாளா்களுக்கு குறைந்த செலவில் வாங்கும் பலனை வழங்குகிறது.
குறிப்பிட்ட தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் செயல்திறன் தரநிலைகள் கடைபிடிக்கப்படும் பட்சத்தில், எந்தவொரு தனிநபரும் அல்லது நிறுவனமும் எந்த இடத்திலும் மின்கலம் மாற்றும் நிலையத்தை அமைக்க அனுமதிக்கப்படுகிறது.
