Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

அறுவை சிகிச்சையின்றி பெருந்தமனி வால்வு மாற்று செயல்முறை!  திருச்சியில் முதன்முறையாக அறிமுகப்படுத்திய காவேரி மருத்துவமனை!

1

அறுவை சிகிச்சையின்றி பெருந்தமனி வால்வு மாற்று செயல்முறை!  திருச்சியில் முதன்முறையாக அறிமுகப்படுத்திய காவேரி மருத்துவமனை!

திருச்சி காவேரி மருத்துவமனை, மூத்த குடிமக்கள் இருவருக்கு டிரான்ஸ்கதீட்டர் பெருந்தமனி வால்வு பதிய செயல்முறையைப் (TAVI) பயன்படுத்தி அறுவை சிகிச்சை இல்லாமல் பெருந்தமனி வால்வு மாற்று  சிகிச்சை வெற்றிகரமாக செய்துள்ளது.

4

இச்சிகிச்சை குறித்து காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குனர் மற்றும் இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் T. செந்தில்குமார்  கூறியதாவது : “பெருந்தமனி என்பது, ஆக்சிஜன் நிறைந்த இரத்தத்தை முழு உடலுக்கும் எடுத்துச் செல்கின்ற மிகப்பெரிய இரத்த நாளமாகும். இடது வெண்ட்ரிக்கிள் என்பது என்பது இதயத்தின் உந்தி அறையாகும் .

3

பெருந்தமனி வால்வு என்பது பெருந்தமனிக்கும் இதயத்தின் இடது கீழறைக்கும் இடையிலுள்ள வால்வாகும். இந்த உறுப்புகளில் ஏதேனும் பிரச்சனை இருக்குமானால், அது மிகவும் ஆபத்துகரமானதாகும் மற்றும் உடனடியாக மருத்துவ இடையீட்டு சிகிச்சை இதற்குத் தேவைப்படும்.

 

2

இதற்கு முன்பு வரை இத்தகைய பாதிப்பு நிலைகள் அறுவைசிகிச்சை மூலம் சரிசெய்யப்படும் அல்லது வால்வு மாற்றப்படும்; இந்த அறுவைசிகிச்சையில் உயிரிழப்பிற்கு பெரிய அளவிலான இடர்வாய்ப்பும் இருக்கும் . நீண்டநாட்கள் மருத்துவமனையில் தங்கியிருக்கும் அவசியத்தோடு மார்பு மீது பெரிய அளவில் வெளியில் தெரியக்கூடிய தழும்பும் இதனால் ஏற்படும். சிகிச்சைக்குப் பிறகு மீண்டு இயல்புநிலைக்கு வருவதற்கு இந்நபர்களுக்கு நீண்டகாலம் தேவைப்படும் . அதன்பிறகே வழக்கமான நடவடிக்கைகளை இவர்களால் மேற்கொள்ள முடியும் .

ஆனால் , நவீன கண்டுபிடிப்புகள், டிரான்ஸ்கதீட்டர் பெருந்தமனி வால்வு பதியம் (TAVI ) போன்ற புதிய விருப்பத்தேர்வுகளை சாத்தியமாக்கியிருக்கின்றன . அறுவைசிகிச்சை  இல்லாமலேயே ஒரு வால்வை இதன்மூலம் பொருத்த முடியும். காலின் இரத்தநாளங்களில் சிறிய துளைகளிட்டு , அவற்றின் வழியாக உட்செலுத்தப்படும் குழாய்களைப் பயன்படுத்தி ஒரு செயற்கை வால்வினை பொருத்துவது இம்மருத்துவ செயல்முறையில் இடம்பெறுகிறது.

எவ்வித வலியும் இல்லாமல் 45 நிமிடங்களுக்குள் விழித்திருக்கும் நிலையிலுள்ள ஒரு நோயாளிக்கு TAVI மருத்துவ செயல்முறையை மேற்கொள்ள முடியும் என்பது இதன் தனித்துவ அம்சமாகும்.

இச்செயல்முறை நிறைவடைந்ததிலிருந்து 6 மணி நேரங்களுக்குப் பிறகு இந்நோயாளியால் எழுந்து நடமாட இயலும், 48 மணி நேரங்களுக்குப் பிறகு மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு சென்று இயல்பான செயல்களை இவர்களால் செய்ய முடியும் .

இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தி காட்டிய  டாக்டர். சூரஜ் நரசிம்மன் மற்றும் அவரது குழுவினரை பாராட்டி மகிழ்கிறேன் என டாக்டர் . T.செந்தில் குமார்  கூறினார் .

இந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது, இதயநோய் நிபுணர் அரவிந்த குமார், விஜயகுமார், மயக்கவியல் நிபுணர் கருப்பையா ராமநாதன் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் உடனிருந்தனர்.

5

Leave A Reply

Your email address will not be published.