Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

தாட்கோ கடன் பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்! திருச்சி மாவட்ட ஆட்சியர்

1

தாட்கோ கடன் பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்! திருச்சி மாவட்ட ஆட்சியர்

தாட்கோ மூலமாக நிலம் வாங்குதல் , நிலம் மேம்பாட்டுத்திட்டம் , துரித மின் இணைப்பு திட்டம் கிணறு அமைத்தல், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சில்லறை விற்பனை நிலையம் அமைத்தல், தொழில் முனைவோர் திட்டம் ஆகிய திட்டங்களுக்கு 18 வயது முதல் 65 வயது வரை ஆதிதிராவிடர்கள் விண்ணப்பிக்கலாம்.

4
2

தமிழக அரசின் தாட்கோ திட்டங்களில் 2022-23ம் நிதியாண்டில் கடன் பெற ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ .2 லட்சத்திலிருந்து ரூ .3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது . இதற்கான வருமான வரம்பு ரூ .3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும் . இளைஞர்களுக்கான சுயவேலை வாய்ப்பு திட்டம் , மருத்துவ மையம் , மருந்தியல் , கண் கண்ணாடியகம் , முடநீக்க மையம் , ரத்த பரிசோதனை நிலையம் மற்றும் ஆகிய திட்டங்களுக்கு வயது வரம்பு 18 முதல் 45 வயது வரை.மேலும் , மகளிர் சுயஉதவி குழுக்களுக்கான பொருளாதார கடனுதவிகளுக்கு மானியத்துடன் கூடிய நிதியுதவி வழங்கப்படும் .

3

மேலாண்மை இயக்குனர் விருப்புரிமை நிதி , தாட்கோ தலைவரின் விருப்புரிமை நிதி , இந்திய குடிமைப்பணி முதன்மைத்தேர்வு எழுதுவோருக்கு நிதியுதவி , சட்ட பட்டதாரிகளுக்கு நிதியுதவி , தமிழ் நாடு தேர்வாணையத்தொகுதி,  முதல்நிலைதேர்வில் வெற்றி  பெற்றவர்களுக்கு நிதியுதவி , ஆடிட்டர் , செலவுக்கணக்கர், நிறுவன செயலர்களுக்கு நிதியுதவி ஆகிய திட்டங்களில் பயன்பெற ஆதிதி ராவிடர்கள் http://application.tahdco.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்  என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித் துள்ளார் .

5

Leave A Reply

Your email address will not be published.