Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

ஏ.டி.எம்., மையங்களில், கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதி

1

இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, ரிசர்வ் வங்கி, பணக்கொள்கை குழு கூட்டத்தை நடத்தி, வட்டி விகிதம் உள்ளிட்ட பல முக்கிய முடிவுகளை அறிவிக்கும்.

நடப்பு நிதியாண்டின் முதல் பணக் கொள்கை குழு கூட்டம், கடந்த 6-8 தேதிகளில் நடைபெற்றது. அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

4
2
  • வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான ‘ரெப்போ வட்டி விகிதம், அதே 4 % தான்.
  • அதனால் வீட்டுக் கடன், வாகன கடன் ஆகியவற்றின் வட்டியிலும் பெரிய மாற்றங்கள் இல்லை.
  • இதே போல் ரிசர்வ் வங்கி, வங்கிகளிடமிருந்து பெறும் கடனை திருப்பிச் செலுத்துவதற்கான வட்டி விகிதமான, ‘ரிவர்ஸ் ரெப்போ’ வட்டி விகிதத்திலும் மாற்றம் இல்லை. அதே35 % தொடரும்
  • நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7% இருக்கும் .
  • நடப்பு நிதியாண்டில், கச்சா எண்ணெய் விலை, ஒரு பேரலுக்கு 100 டாலராக இருக்கும் .
  • நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், நடப்பு நிதியாண்டில் , 5.7 % இருக்கும்
  • அதிகரிக்கும் புவிசார் அரசியல் பதற்றங்கள், பொருளாதார எதிர்பார்ப்புகளில் பாதிப்புகளை ஏற்படுத்தும்
  • ராபி அறுவடை, கிராமப்புற தேவைகளை மீட்டெடுக்கவும், நேரடி தொடர்பு சேவைகளுக்கு உதவுவதாக இருக்கும்
  • வணிக நம்பிக்கை அதிகரிப்பு, வங்கிக் கடன் வளர்ச்சி, அரசாங்கத்தின் மூலதன செலவுக்கான திட்டங்கள் காரணமாக முதலீட்டு நடவடிக்கைகள் அதிகரிக்கும்
  • ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ள நிதிச் சந்தைகள் துவங்கும் நேரம், கொரோனாவுக்கு முந்தைய காலத்தை போல, ஏப்ரல் 18 முதல், காலை 9 மணி ஆக இருக்கும்
  • மாறுதல் செய்யப்பட்ட வீட்டுக் கடன் விதிமுறைகள், அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை நீட்டிக்கப்படும்.வாடிக்கையாளர் சேவை, உள் குறைகளை நிவர்த்தி செய்தல், ஒம்புட்ஸ்மேன் வழிமுறை என, ரிசர்வ் வங்கி நுகர்வோர் பாதுகாப்பை மேம்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
  • நுகர்வோர் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு, ஒரு குழு அமைக்கப்பட உள்ளது
  • ஏ.டி.எம்., மையங்களில், கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை அனைத்து வங்கிகளிலும் அறிமுகப்படுத்த, ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.மோசடிகளை தடுக்க இம்முயற்சிகளை ரிசர்வ் வங்கி எடுத்துள்ளது.
  • இது வாடிக்கையாளரின் கணக்கு இருக்கும் வங்கி ஏ.டி.எம்., மையத்தை மட்டுமே பயன்படுத்தி, இந்த சேவையை பெற முடியும்.
  • ரிசர்வ் வங்கி அறிவிப்பால், இனி அனைத்து வங்கி ஏ.டி.எம்., மையத்திலும் யு.பி.ஐ., முறையை பயன்படுத்தி பணம் எடுக்கலாம்.இது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
3

என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

 

5

Leave A Reply

Your email address will not be published.