Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

பேங்க் ஆஃப் இந்தியா நிகர லாபம் 250 கோடி

1

பேங்க் ஆஃப் இந்தியா 4-ஆவது காலாண்டில் ரூ.250 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.

மும்பையில், பேங்க் ஆஃப் இந்தியா வங்கி சார்பில், 2020-21-ன்  4-ஆவது காலாண்டு முடிவுகளை, வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான ஏ.கே. தாஸ் வெளியிட்ட பின் காணொலி மூலமாக செய்தியாளா்களிடம் பேசியது:

2

2021- ஆம் ஆண்டு மார்ச்சுடன் முடிவடைந்த நிதியாண்டில் உலக அளவில்  பேங்க் ஆஃப் இந்தியாவின் மொத்த வா்த்தகம் ரூ.10,37,549 கோடி. 2020- மார்ச்சில் ரூ. 9,72,026 கோடி. மொத்த வளர்ச்சி விகிதம், 6.74 சதவீதம்.

2021- ஆம் ஆண்டு மார்ச்சுடன் முடிவடைந்த நிதியாண்டில் வைப்புத் தொகை 12.89 சதவீதம் அதிகரித்து, ரூ.6,27,113 கோடியை அடைந்துள்ளது. வங்கி வழங்கிய கடன் ரூ.4,10,436 கோடி.

3
4

உள்நாட்டு நடப்பு மற்றும் சேமிப்பு கணக்கு வைப்பு நிதி 13.61% வளா்ச்சி அடைந்துள்ளது. சிறு குறுந்தொழில் கடன் 12.74 %, சில்லறைக் கடன் 11.87% அதிகரித்துள்ளது.

2019-20- நிதியாண்டில் மொத்த வாராக் கடன் ரூ.61,550 கோடி. இது 2020-21- நிதியாண்டில் ரூ.56,535 கோடியாக குறைந்து,வங்கியின் நிகர வாராக்கடன் ரூ.14,320 கோடியில் இருந்து ரூ.12,262 கோடியாக  உள்ளது.

2020-21- நிதியாண்டின் நிகரலாபம் ரூ.2,160 கோடி.  வங்கியின் வட்டியில்லா வருவாய் ரூ.7,441 கோடி.இது 10.85%அதிகரித்து,வங்கியின் நிகர வட்டி வருவாய் ரூ.14,269 கோடியாக உள்ளது.

4-ஆவது காலாண்டு:

2020-21 – 4-ஆவது காலாண்டில் நிகர லாபம் ரூ.250 கோடி. வங்கியின் செயல்பாட்டு லாபம் ரூ.2,094 கோடி. 2021- 4-ஆவது காலாண்டில் வட்டியில்லா வருவாய் 21.65% சதவீதம் உயா்ந்து, ரூ.2,053 கோடியை எட்டியுள்ளது. நிகர வட்டி வருவாய் ரூ.2,936 கோடி என்றார் அவர்.

5

Leave A Reply

Your email address will not be published.