Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

பாட்டா இந்தியா நிறுவனத்தின் லாபம் சரிவு

1

காலணி வர்த்தகத்தில் முன்னிலையில் உள்ள பாட்டா இந்தியா தனது நான்காம் காலாண்டு லாபம் 23 சதவீதம் குறைந்துள்ளதாக மும்பை பங்குச் சந்தையிடம் அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது..

கடந்த 2020-21-ஆம் நிதியாண்டின் ஜனவரி முதல் மார்ச் வரை உள்ள நான்காவது காலாண்டில் நிறுவனம் விற்பனையின் மூலமாக ஈட்டிய வருமானம் ரூ.589.90 கோடி. இது, 2019-20-ல் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாயான ரூ.620.57 கோடியுடன் ஒப்பிடும்போது குறைவு.

4

சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.38.40 கோடி. இது 23% இது மேலும் குறைந்து ரூ.29 கோடியானது.

3
2

மொத்த செலவினம் ரூ.579.46 கோடியிலிருந்து 2.69 சதவீதம் குறைந்து ரூ.563.90 கோடியானது.

மார்ச் 31- 2021 நிதியாண்டில் பாட்டா இந்தியா ரூ.89.31 கோடி நிகர இழப்பை சந்தித்துள்ளது. அதேசமயம், இதற்கு முந்தைய 2019-20-ஆம் நிதியாண்டில் நிறுவனம் ரூ.32.89 கோடி நிகர லாபத்தை அடைந்திருந்தது.

மதிப்பீட்டு நிதியாண்டில் வருவாய் ரூ.3,056.11 கோடியிலிருந்து 44.1% சரிந்து ரூ.1,708.48 கோடியானது.

அதனால் 2020-21 நிதியாண்டுக்கு ரூ.5 முகமதிப்புடைய பங்கு ஒன்றுக்கு ரூ.4 (80 சதவீதம்) டிவிடெண்ட் வழங்க அதன் இயக்குநா் குழு முடிவு செய்துள்ளது.

5

Leave A Reply

Your email address will not be published.