Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

‘போர்டு இந்தியா’- ‘டாடா மோட்டார்ஸ்’-புரிந்துணர்வு ஒப்பந்தம்

1

‘போர்டு இந்தியா’- ‘டாடா மோட்டார்ஸ்’-புரிந்துணர்வு ஒப்பந்தம்

குஜராத் மாநிலம் சானந்த்தில் உள்ள ‘போர்டு இந்தியா’ நிறுவன தொழிற்சாலையை, ‘டாடா மோட்டார்ஸ்’ கையகப்படுத்துவதற்காக, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ‘டாடா பாசஞ்சர்ஸ் எலக்ட்ரிக் மொபிலிட்டி’ நிறுவனமும், போர்டு இந்தியா நிறுவனமும், குஜராத் மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன.

4
2

இந்த ஒப்பந்தப்படி, போர்டு இந்தியாவின் ஆலை, நிலம், கட்டடங்கள், இயந்திரங்கள், சாதனங்கள் மற்றும் தகுதி வாய்ந்த அனைத்து போர்டு ஊழியர்களும் டாடா நிறுவனத்தில் சேர்த்துக் கொள்ளப்பட உள்ளனர்.

3

இது குறித்து, ‘டாடா மோட்டார்ஸ் பாசஞ்சர்ஸ் வெகிக்கிள்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஷைலேஷ் சந்திரா கூறியதாவது: இதனால் வணிக வாய்ப்புகள் அதிகரிப்பதுடன்,கூடுதல் வேலை வாய்ப்புகளும் உருவாகும் என்றார்.

5

Leave A Reply

Your email address will not be published.