Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

 ரூ.700 கோடி மோசடியில் ஈடுபட்ட பஸ்நிறுவனம்!  பாதிக்கப்பட்டோர் திருச்சியில் ஆர்ப்பாட்டம்!

4

 ரூ.700 கோடி மோசடியில் ஈடுபட்ட பஸ்நிறுவனம்!  பாதிக்கப்பட்டோர் திருச்சியில் ஆர்ப்பாட்டம்!

 

தஞ்சாவூரில் தலைமையிடமாகக் கொண்டு ராஹத் என்ற தனியார் பஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. இதன் உரிமையாளர் கமாலுதீன் தங்களது நிறுவன பஸ்கள் மீது முதலீடு செய்தால் லாபத்தில் பங்கு தருவதாக அறிவித்திருந்தார் ‌.

இதனை நம்பி தமிழ் முழுவதும் நூற்றுக்கணக்கானோர் ரூ.1 லட்சம் முதல் 1 கோடி வரை முதலீடு செய்துள்ளனர். இதுவரை 700 கோடி வரை முதலீடு செய்யப்பட்டுள்ளது‌.

1
3

இந்நிலையில் கடந்தாண்டு கமாலுதீன் இறந்துவிட்டார் இச்சூழ்நிலையில் பணத்தை முதலீடு செய்த நபர்கள் அவருடைய வாரிசுகளை தொடர்பு கொண்டு கேட்டபோது சரியான பதிலும் இல்லை மேலும் மிரட்டல் விடுத்துள்ளனர் ‌‌.

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் சென்னை டிஜிபி நேரில் சந்தித்து புகார் அளித்தனர். அவர் திருச்சி பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கும்படி கூறியிருந்தார்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் இருந்து  பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை அந்நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கப்படவில்லை ஆகவே முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி ராஹத் முதலீட்டாளர்கள் நல சங்கத்தினர் திருச்சி மன்னார்புரம் குற்றப்பிரிவு மண்டல அலுவலகத்தில் நேற்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

2

Leave A Reply

Your email address will not be published.