
திருச்சியில் பஸ் கவிழ்ந்து வாலிபர் பலி! தப்பியோடிய டிரைவர்!
நேற்று முன்தினம் இரவு சென்னையிலிருந்து தென்காசிக்கு ஆம்னி பஸ் 31 பயணிகளுடன் புறப்பட்டது. இந்நிலையில் நேற்று அதிகாலை கள்ளிக்குடி காய்கறி மார்க்கெட் பகுதியில் வந்த போது எதிர்பாராத விதமாக சென்டர் மீடியனில் மோதிய பஸ் கவிழ்ந்தது.


இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மணிகண்டம் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் 30 பயணிகள் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில் சக்தி விக்னேஷ் (19) தென்காசி சேர்ந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பேருந்தை இயக்கி வந்த டிரைவர் முத்துப்பாண்டி காயங்களுடன் தப்பி ஓடினார்.
இவ்விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
