Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

வர்த்தக செய்திகள்!

4

வர்த்தக செய்திகள்!

ஜிஎஸ்டி விலக்கு அரசு ஆலோசனை
ஆன்லைன் மூலம் பொருள்கள் விற்பனை அல்லது சேவை கள் வழங்கும் சிறு நிறுவனங்களை ஊக்குவிக்க, அவர்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

தமிழகத்தில் கடல் பாசி பூங்கா
நாட்டின் முதலாவது கடல்பாசி பூங்கா, தமி ழகத்தில் உருவாக்கப்பட உள்ளது. அதேபோல சென்னை காசிமேடு உட்பட நாடு முழுவதும் உள்ள 5 மீன்பிடி துறைமுகங்கள், சர்வதேச தரத்துக்கு இணையாக மேம்படுத்தப்பட உள்ளன. நடைபாதை வியாபாரிகளுக்கான கடனுதவி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 4 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர் என்றார் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்.

1

தொழிற்சாலைகளுக்கு சீரான மின் விநியோகம்
குஜராத்தில் தொழிற்சாலைகளுக்கு அறிவிக்கப்பட்ட மின்வெட்டு அமலில் உள்ள நிலையில், தமிழகத்தில் தொழிற்சாலைகளுக்கு சீரான மின் விநியோகம் அளிக்கப் படுகிறது என்றும், தமிழகத்தில் தற்போது காற்றாலை மற்றும் சூரிய மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளதால், அனல் மின் நிலையங்களில் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது என்றார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

அமைச்சர் காட்டும் அதிரடி
உரிய கால அவகாசம் வழங்கியும் தொழில் தொடங்காத நிறுவனங்களின் ஒதுக்கீட்டினை கிளை மேலாளர்கள் ரத்து செய்ய வேண்டும் என அமைச் சர் தா.மோ.அன்பரசன் உத்தரவிட்டுள்ளார்.

சிலிண்டருக்கு மானியம்
நாடு முழுவதும் உள்ள ‘பிரதமரின் உஜ்வாலா யோஜனா’ திட்டப் பயனாளிகள் 9.17 கோடி பேருக்கு ஒரு சிலிண்டருக்கு ரூ.200 மானியமாக வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் 35 லட்சம் உஜ்வாலா திட்டப் பயனாளிகள் பயன்பெறுவார்கள் என்று எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

3

ரேசன் கடைகளில் புதிய முறை
ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கு கைரேகைக்கு பதில் கண் கருவிழி பதிவு முறை கொண்டு வரப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.

திருச்சியில் நிறுவனங்களுக்கு அபராதம்:

ஜீன் 1 முதல் திருச்சியில் வணிக நிறுவனங்கள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என திருச்சி மேயர் அன்பழகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருச்சி கலெக்டர் அறிவிப்பு
திருச்சியில் மாவட்ட முன்னோடி வங்கியான ஐஓபி மற்றும் மாவட்ட அனைத்து வங்கிகள் மூலம் இவ்வருடத்தில் (2022&23) ல் ரூ.10,839 கோடி முன்னுரிமைக்கடன்கள் வழங்க நிர்ணயிக்கப்பட்டதாக திருச்சி கலெக்டர் சிவராசு தெரிவித்தார்.

வங்கியில் இஎம்ஐ தொகை ஏறுது…
பாரத ஸ்டேட் வங்கி, பேங்க் ஆப் பரோடா, ஆக்சிஸ் உட்பட முக்கிய வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதங்களை 0.10 சதவீதம் வரை உயர்த்தியது. இதையடுத்து கார், தனிநபர், வீட்டுகடன் வாங்கியோர் செலுத்தும் மாத இஎம்ஐ தொகை அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

முதலீட்டாளர்கள் ரொம்ப ஹேப்பியாம்…
தமிழகத்தில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளதாகவும், ஏற்கனவே முதலீடு செய்தவர்கள் விரிவாக்கத்திற்காகவும், புதிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய ஆர்வமாக இருப்பதாகவும் சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற்ற உலக பொருளாதார மன்ற மாநாட்டில் தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

 

2

Leave A Reply

Your email address will not be published.