Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

வர்த்தக செய்திகள்

1

வர்த்தக செய்திகள்

எஸ்.பி.ஐ, நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.5,00,000 கோடி..!
நாட்டின் மிகப் பெரிய வங்கியான எஸ்.பி.ஐ, அதன் வீட்டுக் கடன் வணிகத்தில், நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.5 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இவ்வங்கியின் ரியல் எஸ்டேட் மற்றும் வீட்டு வசதி பிரிவு ஐந்து மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டில், இவ்வணிகப் பிரிவு, நிர்வகித்து வந்த சொத்து மதிப்பு ரூ.89,000 கோடி.

 

4

பிட்காயினை அடுத்து எத்திரூயம்..!
சர்வதேச கிரிப்டோ கரன்சி சந்தையில் பிட்காயின் மதிப்பு 53 ஆயிரம் டாலர்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதனால் பிட்காயினுக்கு அடுத்த இடத்தில் உள்ள கிரிப்டோ கரன்சியான எத்திரூயத்தின் மீது முதலீட்டாளர்கள் பார்வை திரும்பியுள்ளது. சர்வதேச கிரிப்டோ சந்தையில் ஒரு எத்திரூயத்தின் மதிப்பு முன் எப்போதும் இல்லாத வகையில் 1,938 டாலர் எட்டியுள்ளது.

3

ஆன்லைன் மளிகையில் குதித்த டாடா:
நாட்டின் முக்கிய தொழில் குழுமமான டாடா ஏற்கனவே பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளது. இப்போது மளிகை சாமான்கள் விற்பனை செய்யும் பிக் பாஸ்கெட் நிறுவனத்தின் 68 சதவீத பங்குகளை ரூ.9,500 கோடி செலவில் வாங்கிட முடிவு செய்துள்ளது. இதனால் ரிலையன்ஸ், அமேசான் நிறுவன ஆன்லைன் மளிகை பொருட்கள் விற்பனைக்கு போட்டியாக டாடாவும் களத்தில் குதிப்பது முடிவாகியுள்ளது.

91 சதவீத ஜி.எஸ்.டி. இழப்பீடு கொடுத்தாச்சி..!
கடந்தாண்டு அக்டோபரிலிருந்து இதுவரையில் மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கிய ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகை ரூ.1 லட்சம் கோடியை தொட்டுள்ளதாகவும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரையில் ஒட்டு மொத்த மதிப்பீட்டில் 91 சதவீத ஜி.எஸ்.டி. இழப்பீடு விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வலை விரித்த வருமான வரித்துறை..!
வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் சேமிப்பது என்பது மாத சம்பளதாரர்களின் ஒய்வு காலத்தை பாதுகாக்கும் வழியாக உள்ளது. பி.எப். மற்றும் பி.பி.எப். திட்டத்தின்கீழ் வருடத்திற்கு 2.5 லட்சம் வரை சேமிக்கலாம். அதற்கு மேல் சேமிக்கும் பணம் மீது வருமான வரி செலுத்த வேண்டும் என்ற நடைமுறை உள்ளது.

2

இந்நிலையில் வருடத்திற்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கின்றவர்கள் வருமான வரியிலிருந்து தப்பிக்க பி.பி.எப்.-ல் சேமிக்கின்றனர். இதனால் அவர்கள் வருமான வரியிலிருந்து தப்பிக்கின்றனர். இவ்வாறு அரசை ஏமாற்றும் நபர்களை வலைவிரித்து பிடிக்க மத்திய அரசு வரிவிதிப்பு கொள்கையை கடுமையாக்கியுள்ளது.

கடன் பத்திரம் மூலம் ரூ.550 கோடி திரட்டிய எஸ்.பி.ஐ. கார்டு
எஸ்.பி.ஐ. கார்ட்ஸ் அண்ட் பேமண்ட்ஸ் சர்வீசஸ் நிறுவனம் (எஸ்.பி.ஐ. கார்டு) கடன் பத்திரங்களை தனிப்பட்ட ஒதுக்கீட்டின் அடிப்படையில் விற்பனை செய்ததன் மூலம் ரூ.550 கோடி திரட்டியுள்ளது. இந்த கடன் பத்திரங்களின் முதிர்வு காலம் பிப்ரவரி 23, 2024 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த கடன் பத்திரங்களுக்கு ஆண்டுக்கு 5.90 சதவீதம் வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கோல்டு பண்டில் முதலீடு முதிர்வுத்தொகை கிடைக்கும் வழி
கோல்டு பண்டில் முதலீடு செய்தவர்கள் முதிர்வு தேதியில் குறிப்பிட்ட காலத்திற்கு முன்னரே முதலீட்டாளருக்கு தகவல் தெரிவித்து, பின்னர் வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் தொகையை செலுத்திவிடுவார்கள். மேலும் வங்கிக் கணக்குகள் மற்றும் இமெயில் முகவரி மாறியிருந்தால் தங்கப்பத்திரம் விண்ணப்பித்த இடத்திலேயே விவரங்களை சமர்ப்பித்து மாற்றிக் கொள்ள வேண்டும்.

பங்கு சந்தையில் நஷ்டத்தை ஈடு செய்யும் வருமான வரி
பங்குகளில் மேற்கொள்ளப்பட்ட நீண்ட கால முதலீட்டில் நஷ்டம் ஏற்பட்டால் வரிக்கணக்கு தாக்கல் செய்வதால் அடுத்த எட்டு ஆண்டுகளில் எடுத்து சொல்லி வருமான வரியை மிச்சப்படுத்தலாம். இந்த இழப்பை நிறுவனப் பங்குகள் மற்றும் பிற சொத்துகள் மூலம் கிடைக்கும் மூலதன ஆதாயத்தில் ஈடுகட்டி வருமான வரி கட்டுவதை தவிர்க்கலாம்.

குப்பை வரி..!
திருச்சி நகர பகுதிகளில் குப்பை வரி என்கிற பெயரில் வணிகர்களை பாதிப்புக்குள்ளாக்குகிறார்கள். அரசு நிர்வாகத்திற்கு வரி தேவை தான். ஆனால் சாமானிய மக்களையும், வணிகர்களையும் சிரமத்திற்குள்ளாக் கக் கூடாது” — தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் வெள்ளையன்.

ரூ.4,95,502 கோடி கடன்கார மாநிலமாக தமிழகம்..!
நடப்பு நிதியாண்டில் தமிழக அரசின் கடன் தொகை ரூ.4,95,502 கோடியாக உள்ளது. வரும் 2022 மார்ச் 31ம் நாள் நிலவரப்படி தமிழகத்தின் ஒட்டு மொத்த கடன் அளவு ரூ.5,70,189.29 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பரிந்துரை காலம் நீட்டிப்பு..!
வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து பரிந்துரைக்கப்படும் பரிந்துரை பட்டியலின் செல்லுபடி காலத்தை 6 மாதத்திலிருந்து ஓராண்டாக உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளதாக தமிழக அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சித் துறை செயலர் முகமது நஜிமுதீன் தெரிவித்துள்ளார்.

5

Leave A Reply

Your email address will not be published.