
மாருதி சுஸுகி நிறுவனத்தின் செயல் இயக்குநா் (விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல்) சஷங் ஸ்ரீவஸ்தவா பிடிஐ,
மோட்டார் வாகனத் துறைக்கு அடிப்படையாக உள்ள உருக்கு விலை கிலோவிற்கு ரூ.38-லிருந்து ரூ.68-ஆக உயர்ந்துள்ளது. அது மட்டுமின்றி,முக்கிய உலோகங்களான ரோடியம், பலடியம் ஆகியவற்றின் விலையும் கிராமுக்கு ரூ.19,000-லிருந்து ரூ.66,000-ஆக உயர்ந்துள்ளது. இது நிறுவனத்தின் உற்பத்தி செலவில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


மூலப்பொருள் விலை அதிகரித்துள்ள நிலையில், நிறுவனத்தின் நிதிச் சூழலை கருத்தில் கொண்டு தயாரிப்புகளின் விலையை உயா்த்துவதே கடைசி தீர்வு.
அதனால் 2021-2022-இரண்டாவது காலாண்டில் (ஜூலை-செப்டம்பா்) அனைத்து கார்களின் விலையையும் அதிகரிக்க மாருதி சுஸுகி முடிவெடுத்துள்ளது என்றார்
