Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

திருச்சியில் இலவச அனுமதியுடன் கிறிஸ்தவ புத்தக கண்காட்சி

திருச்சியில் இலவச அனுமதியுடன் கிறிஸ்தவ புத்தக கண்காட்சி

சென்னையை சேர்ந்த (Beautiful Books) நிறுவனம் சார்பில் திருச்சியில் கிறிஸ்தவ புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. இலவச அனுமதியுடன் திருச்சி தலைமை அரசு மருத்துவமனை (GH) எதிரில் டாக்டர் மதுரம் ஹாலில் தினசரி காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த புத்தக கண்காட்சி நடைபெறுகிறது.

ஆகஸ்ட் 22 திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை 26 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த புத்தக கண்காட்சியில் பழ மொழிகளில், மொழிபெயர்ப்புடன் பரிசுத்த வேதாகம புத்தகங்கள், வேத ஆராய்ச்சி குறிப்புகள், வசன போர்டுகள், அட்டைகள், Gifts, ஸ்டிக்கர்கள், வாழ்க்கை வரலாறு (Biography) புத்தகங்கள், தியான புத்தகங்கள், துதி ஆராதனை தொகுப்பு மடல் புத்தகங்கள் மற்றும் ஆலய அலங்காரப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.

 

இது குறித்து Christian Book Fair-ன் ஒருங்கிணைப்பாளர் பாஸ்டர் ஆப்ரஹாம் மோடி கூறும் போது, இக்கண்காட்சியில் ரூ.100 முதல் ரூ.8000 மதிப்புள்ள பைபிள்கள் சுமார் 300க்கும் மேற்பட்ட தலைப்புகளில் பரிசுத்தவான்களின் வாழ்க்கை வரலாறு புத்தகங்கள் என 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட Collections உள்ளது.

மிகவும் பயனுள்ள ஒரு விற்பனை கண்காட்சியாக திட்டமிட்டபடி சிறப்பாக நடைபெற்று வருகிறது என்றார். மேலும் கூடுதல் விபரங்கள் தேவைப்படுவோர் 94713 17862 என்ற எண்ணில் பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.