Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

திருச்சி பெல் வளாகத்தில் சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தினர் உண்ணாவிரதம்!

1

திருச்சி பெல் வளாகத்தில் சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தினர் உண்ணாவிரதம்!

திருச்சி திருவெறும்பூர் பெல் வளாகத்தில் உள்ள ஆர்.எஸ்.கே. பள்ளியில் கட்டண உயர்வை கண்டித்து பெல் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் பெல் பாய்லர் ஆலை  மெயின் கேட் முன்பு நேற்று (26/08/2022)  நடைபெற்றது.

4
2

 இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு பெல் தொழிற்சாலை சி.ஐ.டி.யு. தொழிற்சங்க பொது செயலாளர் பிரபு தலைமை வகித்தார். போராட்டத்தை சி.ஐ.டி.யு. தொழிற்சங்க புறநகர் மாவட்ட செயலாளர் சிவராஜன் தொடங்கி வைத்தார் .

3

பெல் குடியிருப்பு வளாகத்தில் இயங்கி வரும் பள்ளியின்  வசூலிக்கப்படும் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்,  இப்பள்ளிக்கு தொடர்ந்து மானியம் வழங்க வேண்டும் . குழந்தைகளின் கற்கும் திறனை அதிகப்படுத்திட முழு நேர பள்ளியை நடத்திட வேண்டும்,  நமஸ்தே காயத்ரி மந்திரம் போன்ற கல்விக்கு தேவையில்லாதவற்றை உடனடியாக நிறுத்த வேண்டும் , தமிழக மக்களின் கலாச்சாரத்தை பண்பாடு சீரழிக்க கூடாது , உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .

 

5

Leave A Reply

Your email address will not be published.