
மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் கீழ் செயல்படும் தன்னாட்சி கொண்ட தென்னை மேம்பாட்டு வாரியமும், இந்திய தொழில்வர்த்தக சபையின் கூட்டமைப்பும் இணைந்து தென்னை பொருட்கள் குறித்த 3 நாள் இணைய வழி வர்த்தக பொருட்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. 2022 ஏப்ரல் 26 முதல் 28 வரை நடைபெறவுள்ள இந்த பொருட்காட்சியில் தேங்காயின் பல்வேறு பகுதிகளைக் கொண்டு உணவு, இனிப்பூட்டுதல், உணவல்லாத குளிர்பானங்கள் போன்ற பலவகைப்பட்ட பதனம் செய்த பலவகையான பொருட்கள் இடம்பெற்றிருக்கும்.
இந்த இணையவழி பொருட்காட்சியில் தேங்காய் பொருட்கள் இடம்பெறுவது மட்டுமின்றி தேங்காய் பொருட்களை வாங்குவோரில் தெரிவு செய்யப்பட்ட, வாங்குவோரை ஏற்பாடு செய்தல், பொருட்களை காட்சிப்படுத்துதல், தகவல் தொகுப்பு அளித்தல், சுவரொட்டிகள், பெரு நிறுவன வீடியோக்கள், வாங்குவோருடன் நேரடியாக கலந்து பேசும் வசதி போன்றவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேங்காய் பொருள் உற்பத்தியாளர்கள் பதிவு செய்வதற்கான இணைப்பு: https://registrations.ficci.com/vtfccp/exhibitor-registration.asp
வாங்குவோர் பதிவு செய்வதற்கான இணைப்பு: https://registrations.ficci.com/vtfccp/business-registrationb.asp
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள

சரீனா மேரி ஜான்சன், உதவி இயக்குநர்,
ஃபிக்கி கேரளா மாநில கவுன்சில்,
தொலைபேசி: 0484 4058041/42, 0484 4876976,
மொபைல்: 9746903555,
மின்னஞ்சல்: kesc@ficci.com
