
திருச்சி மலைக்கோட்டை கோவிலில் ரூ.26 ½ லட்சம் உண்டியல் வசூல்!
திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் கோவிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி கோயில் உதவி ஆணையர் ஹரிஹரசுப்பிரமணியன் , திருவானைக்காகோவில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது .


இதில், ரொக்கமாக ரூ. 26 லட்சத்து 56 ஆயிரத்து 311 , தங்கம் 0.27 கிராம் , வெள்ளி 1.810 கிராம் காணிக்கையாக வந்தது.
காணிக்கை எண்ணும் பணியில் கோயில் பணியாளர்கள் , அறநிலையத்துறை அலுவலர்கள், பக்தர்கள், தன்னார்வலர்கள் என 170 – க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர் .
