Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

பாரதிதாசன் யூனிவர்சிட்டியில் ஊடகம் மற்றும் தொடர்பு துறை சார்பில் போட்டிகள்

1

பாரதிதாசன் யூனிவர்சிட்டியில் ஊடகம் மற்றும் தொடர்பு துறை சார்பில் போட்டிகள்

75-வது சுதந்திர தினத்தையொட்டி திருச்சியில் பாரதிதாசன் யூனிவர்சிட்டி காஜாமலை கேம்பஸில் – Media and Communication துறை சார்பில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான குறும்படம், போட்டோகிராபி, ஓவியம் மற்றும் வீடியோ மீம்ஸ் போட்டிகள் கடந்த (26.08.2022) அன்று நடத்தப்பட்டது. 

4

 

3

இதில், சிறப்பு விருந்தினராக புரூஸ்லி மற்றும் விலங்கு திரைப்பட இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். தேர்வு கட்டுப்பாட்டாளர் பேராசிரியர் சீனிவாச ராகவன் மற்றும் துணை வேந்தர் பேராசிரியர் செல்வம் முன்னிலை வகித்தனர்.

2

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதும் இருந்து கல்லூரி மாணவ,மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்கள் திறமையினை வெளிப்படுத்தினர்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

 

5

Leave A Reply

Your email address will not be published.