
க்ராஸ் செல்லிங், அப் செல்லிங் முறை..!

ஏற்கனவே நம் உற்பத்திப் பொருளை வாங்கி வரும் வாடிக்கையாளருக்கு நம்முடைய மற்றொரு உற்ப த்திப் பொருளை அல்லது சேவையை அளிப்பது க்ராஸ் செல்லிங் எனப்படுகிறது.

நம் உற்பத்திப் பொரு ளை உபயோகித்து வரும் வாடிக்கையாளரை அதிக விலை உள்ள நம் மற்ற உற்பத்திப் பொருட்களை வா ங்கும்படி தூண்டுவது அப்-செல்லிங் முறை. இவை இரண்டிற்கும் நாம் நம் வாடிக்கையாளர்களை பயன்படுத்த வேண்டும். வாடிக்கையாளர்களின் நம்பிக்கை மற்றும் நன்மதிப்பை பெற்ற எந்த ஒரு நிறுவனமும் தங்களுடைய புதிய அல்லது மற்ற உற்பத்திப் பொருட்களை, அது விலை கூடுதலாக இருந்தாலும் கூட வாங்க வைப்பது மிகவும் எளிதாகும்.
