Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

திருச்சி மாநகரில் 13.09.2022 அன்று மின்தடை செய்யப்படும் பகுதிகளின் பட்டியல் வெளியீடு ?

1

திருச்சி மாநகரில் 13.09.2022 அன்று எந்ததெந்த பகுதியில் மின்தடை தெரியுமா?

ஸ்ரீரங்கம்:

4

ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால்,  அங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான ஸ்ரீரங்கம் முழுவதும், மூலத்தோப்பு, மேலூர், வசந்தநகர், ரயில்நிலையம் சாலை, அனைத்து உத்தர வீதிகள் மற்றும் சித்திரை வீதிகள், அடைவளஞ்சான் வீதிகள், பெரியார் நகர், அம்மா மண்டபம் சாலை, வீரேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் 13.09.2022 (செவ்வாய் கிழமை) நாளை காலை 9.45 முதல் மாலை 4 மணி வரையில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய ஸ்ரீரங்கம் செயற்பொறியாளர் ஆர்.செல்வம் தெரிவித்துள்ளார்.

3
2

கண்டோன்மெண்ட்:

திருச்சி நகரியம் கோட்டம் , கண்டோன்மெண்ட் பிரிவிற்குட்பட்ட பீமநகர் பகுதிகளில் உயரமுத்த மின்பாதைகளில் பழைய மின்கம்பிகளை அகற்றிவிட்டு அதிக திறனுடைய புதிய மின்கம்பிகள் மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் பீமநகர் கண்டி தெரு, பென்சனர் தெரு, ஆணைகட்டி மைதானம் , மேட்டு தெரு , யாதவ தெரு, அல்திவான் பள்ளிவாசல், ஹாஜியா தெரு, மற்றும் கண்ணன் ரைஸ்மில் ஆகிய பகுதியில் 13.09.2022 (செவ்வாய் கிழமை) நாளை காலை 10.00 மணி முதல் மாலை 03.30 மணி வரை மின்விநியோகம் இருக்காது. என மின்வாரிய தென்னூர் செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் மின்தடை புகார் சம்பந்தமான தகவல்களுக்கு 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

5

Leave A Reply

Your email address will not be published.