
பங்கு முதலீட்டாளர்கள் நலன் கருதி தற்போது பங்கு சேமிப்புக்கான ‘டீமேட்’ கணக்கு, பங்கு வர்த்தக கணக்கு ஆகியவற்றின் விண்ணப்பத்துடன் பொது அதிகார பத்திரத்திலும் முதலீட்டாளர்களிடம் கையொப்பம் பெறப்படுகிறது.
இந்த பொது அதிகார பத்திர உரிமம் மூலம் முதலீட்டாளர்களின் அனுமதியின்றி அவர்களின் பங்குகளில் வர்த்தகம் புரிவது, வரம்புத் தொகை குறைந்தால் பங்குகளை விற்று விடுவது போன்றவற்றை பங்குத் தரகு நிறுவனங்கள் மேற்கொள்வதாக குற்றச்சாட்டு உள்ளது.


இந்த முறைகேடுகளை தடுக்க ‘இனி பங்குகளை விற்பதற்கும், அடமானம் வைப்பதற்கும் டி.டி.பி.ஐ., என்ற தனி ஆவணம் பயன்படுத்த வேண்டும்’ என்ற புதிய விதிமுறையை செபி அறிமுகப்படுத்தியுள்ளது.
வரம்புத் தொகைக்காக பங்குகளை அடமானம் வைக்கவும், அடமானப் பங்குகளை மீட்பதற்கும் இந்த ஆவணம் உரிமை தருகிறது.
இந்த இரு அம்சங்கள் தொடர்பான உத்தரவை பங்கு முதலீட்டாளர்கள் டி.ஐ.எஸ்., ரசீது அல்லது இ–டி.ஐ.எஸ்., எனும் மின்னணு ரசீது மூலம் பங்குத் தரகு நிறுவனங்களுக்கு அளிக்கலாம்.
இந்த முறை ஜூலை 1 முதல் அமலுக்கு வர உள்ளது.. இதனால், முதலீட்டாளர்களிடம் பெறும் பொது அதிகார பத்திர உரிமையை தவறாக பயன்படுத்துவது தடுக்கப்படும்’ என, செபி தெரிவித்துள்ளது
