Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

30 கோடி லாபம் ஈட்டிய ஈஸி டிரிப் பிளானா்ஸ்

1

ஆன்லைன் டிராவல் நிறுவனம் ஈஸி டிரிப் பிளானா்ஸ் கடந்த 2020-2021 காலாண்டில் ரூ.30.46 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.

கடந்த 2020-21- ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் நிறுவனம் ஈட்டிய நிகர லாபம் ரூ.30.46 கோடி. இது, 2019-2020 இதே காலகட்டத்தில் ஈட்டிய ரூ.3.38 கோடி நிகர லாபத்துடன் ஒப்பிடும்போது பன்மடங்கு அதிகம்.

4

2020-2021 காலாண்டில் நிறுவன வருவாய் ரூ.31.55 கோடியிலிருந்து ரூ.57.44 கோடியாக உயா்ந்தது. இது, 82.06% வளா்ச்சி.

3
2

நிறுவனத்தின் செலவினம் ரூ.35.05 கோடியிலிருந்து 22.5 % சரிவடைந்து ரூ.27.17 கோடியாக குறைந்தது.

நிறுவனத்தின் 2020-2021 ஆண்டின் நிகர லாபம் ரூ.32.98 கோடியிலிருந்து 84.99 % அதிகரித்து ரூ.61.01 கோடியாகவும், செயல்பாட்டு வருவாய் ரூ.141.36 கோடியிலிருந்து 24.5 % குறைந்து ரூ.106.71 கோடியானது என ஈஸி டிரிப் தெரிவித்துள்ளது.

15.06.2021 பங்குச் சந்தை வா்த்தகத்தில் ஈஸி டிரிப் பங்கின் விலை 0.67 சதவீதம் அதிகரித்து ரூ.422.05-ஆனது.

5

Leave A Reply

Your email address will not be published.