
ஹெயர் நிறுவனம் 2022-ம் ஆண்டுக்கான எலிகண்ட் கூல் ஏர் கண்டிஷனர்களை அறிமுகம் செய்துள்ளது.

நவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட எலிகண்ட் கூல் ஏர் கண்டிஷனர் வரிசையில் 10 புதிய மாடல்களை ஹெயர் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை 33,990 ரூபாய் முதல் 79,990 ரூபாய் ஆகும். இந்த புதிய ஏர் கண்டிஷனர்களின் கம்ப்ரசருக்கு 12 ஆண்டு + 5 ஆண்டு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதமும் உண்டு. 12.5% கேஷ்பேக் அல்லது ரூ.3,500 சலுகையும் வழங்கப்படும்.

ஐஸ் கட்டியாகாத தூய்மை தொழில்நுட்பத்தை அதன் ஏர் கண்டிஷனர்களில் அறிமுகம் செய்து, ரிமோட் கண்ட்ரோலில் உள்ள ஒரு பட்டனை அழுத்துவதன் மூலம் அது ஏர்கண்டினரின் உள்புறம் உள்ள தூசியை அகற்றி அதை கழுவி சுத்தப்படுத்துகிறது. அதிக மின் சேமிப்புக்கு ஐஎஸ்இஇஆர் 5.40 தொழில்நுட்பம், ஏசி 5 இன் 1 எளிமையாக மாற்றும் தொழில்நுட்பத்தில் வருகிறது. இவ்வாறு அதன் தலைவர் சத்தீஷ் கூறுகிறார்.
