
உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், சமூக ஊடகமான டுவிட்டரை, கிட்டத்தட்ட 3.39 லட்சம் கோடி ரூபாய்க்கு வாங்குவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டிருக்கிறார்.
டுவிட்டர் நிறுவனம், சுதந்திரமான பேச்சுக்கான தளமாக இல்லை.அதனால், அதை ஒரு தனியார் நிறுவனமாக மாற்ற வேண்டும் என்பதால் அதனை வாங்குவதாக எலான் மஸ்க் கருத்து தெரிவித்தார்.


இந்த டீல், இந்த ஆண்டின் இறுதிக்குள் நிறைவேற்றப்படும். இருப்பினும், அது அவ்வளவு எளிய விஷயம் இல்லை. நிர்வாக குழுவும், மஸ்க்கும் ஒப்புக்கொண்டாலும், பங்குதாரர்கள் அனுமதிக்க வேண்டும். மேலும், அமெரிக்கா மற்றும் இதர நாடுகளில் உள்ள கட்டுப்பாட்டு அமைப்புகள் இதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.. அதன் பிறகே ஒப்பந்தம் செல்லுபடியாகும்.
டுவிட்டர் நிறுவனத்தை, விளம்பரங்கள் அடிப்படையிலான வணிகமாக இல்லாமல், சந்தாதாரர்கள் அடிப்படையிலான வணிகமாக மாற்ற இருப்பதாக மஸ்க் தெரிவித்துள்ளார்.
