Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

ரயிலில் உடைமைகளை தவறவிட்ட பயணிகளுக்காக…

1

ரயிலில் உடைமைகளை தவறவிட்ட பயணிகளுக்காக…

திருச்சி ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்டு 150 ரயில் நிலையங்கள் உள்ளது. இதில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் பயணிகள் தங்களுடைய உடமைகளை ரயில் பெட்டிகள் மட்டும் ரயில் நிலையங்களில் தவற விட்டு சென்று விடுகின்றனர்.

4
2

பயணிகள் உடைமைகளை தவற விட்டு செல்வது என்பது நாளைக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. உரிய ஆவணங்களை ஒப்படைக்கும் பயணிகளின் உடைமைகளை இரயில்வே நிர்வாகம் ஒப்படைத்து வருகிறது.
இதுவரை 99% பொருட்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும்
உரிய ஆவணங்களுடன் உரிமையாளர்கள் வராத பட்சத்தில் அந்த பொருட்கள் கமர்சியல் பிரிவில் ஒப்படைக்கப்பட்டு ஏலம் விடப்படுகிறது.

3

ரயில் பெட்டிகள் மற்றும் ரயில்வே நிலையங்களில் தங்கள் உடமைகளை தவறவிடும் பயணிகள் உடனடியாக 139 என்ற அவசர எண்ணில் தொடர்பு கொண்டால் ரயில்வே நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொள்வார்கள்.

5

Leave A Reply

Your email address will not be published.