Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

போபால் இந்திய மருத்துவ கழகத்தில்(எய்ம்ஸ்) வேலைவாய்ப்பு

1

போபால் இந்திய மருத்துவ கழகத்தில்(எய்ம்ஸ்) காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு

விளம்பர எண். ADM-2(2)/AIIMS/Bhopal/Rectt.Cell/Direct/2022/01

4

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

3
2
  1. பணி:Registrar -01 வயது 35க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.15,600 – 39,100. ஏதாவதொரு ஒரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்று 7 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  2. பணி: Blood Transfusion Officer -01, வயது 21 முதல் 40க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.15,600 – 39,100. சம்மந்தப்பட்ட பிரிவில் எம்டி முடித்து ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  3. பணி: Medical Physicist-01, சம்பளம்: மாதம் ரூ.15,600 – 39,100. தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது இயற்பியல் பாடத்தில் முதுநிலைப் பட்டம் பெற்று ரேடியோலாஜிக்கல் மெடிக்கல் பிசிக்ஸ் -இல் முதுநிலைப் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
  4. பணி: Accounts Officer-01, வயது: 21 முதல் 35க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.15,600 – 39,100.  வணிகவியல் பாடத்தில் 55 % மதிப்பெண்களுடன் இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  5. பணி: Tutor/Clinical Instructor(Nursing)- 33 வயது: 35க்கு மிகாமல் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.15,600 – 39,100. நர்சிங் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 3 ஆண்டுகள் கற்றல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணமாக பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.1000, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ.250 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.aiimsbhopal.edu.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.06.2022.

 

5

Leave A Reply

Your email address will not be published.