Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

இறந்தும் உயிர்வாழும் இன்ஜினியர்!

1

இறந்தும் உயிர்வாழும் இன்ஜினியர்!

கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுபாஷ்(23) டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினீயரிங் முடித்துள்ள இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக  பணி புரிந்து வந்தார்.

4

இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு திருச்சியில் இருந்து கரூர் நோக்கி சென்ற பயணிகள் சிறப்பு ரெயில் சுபாஷ் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

3
2

அங்கிருந்து  அவர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்றுவந்த அவர் நேற்று முன்தினம் நள்ளிரவு மூளைச்சாவு அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பெற்றோர் சுபாஷின் உடல் உறுப்புகளை தானம் வழங்க மருத்துவக்குழுவினரிடம் கூறினர்.

இதனையடுத்து,  நேற்று  மருத்துவக்குழுவினர் அவருடைய இதயம், நுரையீரல், 2 சிறுநீரகங்கள் ஆகியவற்றை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர். பின்னர், வாலிபரின் இதயம் மற்றும் நுரையீரல் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனைக்கும், கிட்னி திருச்சி அரசு மருத்துவமனைக்கும் மற்றொரு கிட்னி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்க்பட்டது. இரண்டு கண்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிக்கு அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.

சுபாசின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. வாலிபரின் உடலுக்கு மருத்துவமனை டீன் நேரு மற்றும் மருத்துவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

5

Leave A Reply

Your email address will not be published.