
திருச்சியில் பிரபல திரைப்பட இசை அமைப்பாளர் கார்த்திக் ராஜாவின் இசை நிகழ்ச்சி!
திருச்சியில் செப்டம்பர் மாதம் 24ம் தேதி பிரபல திரைப்பட இசைமைப்பாளர் கார்த்திக் ராஜாவின் நேரடி இசை நிகழ்ச்சி மற்றும் டான்ஸ் மாஸ்டர் கலா குழுவினரின் நடனங்களும் ஒருங்கே இணைந்து பொன் மாலைப்பொழுது என்ற தலைப்பில் நடைபெற உள்ளது. இது குறித்து செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதில் கார்த்திக் ராஜா, கலா மாஸ்டர், ரோட்டரி 3000-ன் ஆளுநர் ஜெரால்டு, அருண் ஈவண்ட்ஸ் அருண், லலிதா ஜுவல்லரி திருச்சி கிளை மேலாளர் தமிழ் செல்வம் ஆகியோர் கூறும் போது: இசைஞானி இளையராஜா மற்றும் கார்த்திக் ராஜா இசையில் உருவான பாடல்கள் கொண்ட பிரம்மாண்ட நேரடி இசை நிகழ்ச்சி செப்டம்பர் 24ஆம் தேதி மாலை 6 மணிக்கு திருச்சி மொராய்ஸ் சிட்டியில் நடைபெறுகிறது.

இதில் பாடகர்கள் ஹரிஹரன், உன்னிமேனன், சாதனா சர்க்கம், ஸ்ரீராம், ரீட்டா, சிவாங்கி உள்ளிட்ட பல பிரபல பாடகர்கள் பங்கேற்று பாட உள்ளனர்.
மேலும் நகைச்சுவை நடிகர்கள் யோகி பாபு, சதீஷ் ஆகியோர் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியினை நடிகை குஷ்பூ தொகுத்து வழங்க உள்ளார்.
ரூ.500, 1000, 2000, 3000, 5000 மற்றும் 10 ஆயிரம் ஆகிய விலைகளில் டிக்கெட்டுகள் விற்பனைக்கு கிடைக்கிறது.
டிக்கெட்டுகளை Pay TM insider & Book My show போன்ற ஆன்லைன் செயலிகள் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்தனர்.
