
பாதுகாப்பான தீபாவளியை கொண்டாட பட்டாசு வெடித்து காட்டி விழிப்புணர்வு!
தீபாவளி என்றாலே உடனே நினைவுக்கு வருவது புத்தாடைகள், பலவகை
பலகாரங்கள், முக்கியமானது பட்டாசுகளும், மத்தாப்புகளும் தான் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு முன்பும் தீபாவளியன்றும், தொடர்ந்து வருகின்ற நாட்களின் பட்டாசு விபத்துகளின் காரணமாக பலர் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறார்கள்.

அதிலும் கண் மருத்துவமனைகளுக்கு வருகின்ற நோயாளிகள் எண்ணிக்கை அதிகம். இதில் பெரும்பாலோனோர் 10 முதல் 20 வயதிற்குட்பட்டவர்கள்.
துரதிஷ்டவசமாக இந்த விபத்தில் பார்வை இழந்தவர்களும் உண்டு. அதனால் தீபாவளி மகிழ்ச்சி மற்றும் பாதுகாப்பு தீபாவளியாக அமைய ஜோசப் கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட தீயணைப்பு துறை, பாரதிதாசன் ‘பல்கலைக்கழகம், ரோட்டரி கிளப் ஆப் பட்டர்பிளை ஜம்புகேஸ்வரர் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.

இதில் 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு கல்லூரி
மாணவர்களுக்கிடையே தீ விபத்து ஏற்பட்டால் அதற்கான முதலுதவி மற்றும் செயல் முறை விளக்கம் குறித்தும் தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் அம்பிகா
பாரதிதாசன் பல்கலைக்கழக NSS துறையின் தலைவர் லட்சுமிபிரபா ரோட்டரி
மாவட்ட மண்டல செயலாளர் மோகன் மற்றும் ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர்
எழில் அவர்கள் முன்னிலையில் செய்து காண்பித்தனர்.

ஜோசப் கண் மருத்துவமனை சார்பில் தீயணைப்பு துறையை சேர்ந்த
ஊழியர்களுக்கு தீ விபத்தில் சிக்கியவர்களுக்கும் முதலுதவி செய்வது எப்படி என்பது குறித்து குறிப்பாக கண்களில் தீக்காயம் ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவி குறித்தும் விளக்கப்பட்டது.
இதில் 300க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். ஜோசப் கண் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் பிரதிபா மற்றும் ஜோசப் கண் மருத்துவமனையின் நிர்வாக தலைவர் டாக்டர் நெல்சன் ஜேசுதாசன் இவர்கள் முன்னிலையில் இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
ரோட்டரி கிளப் ஜம்புகேஸ்வர் மற்றும் பட்டர்பிளை தலைவர்கள் பாலகிருஷ்ணன் மற்றும் சுபத்ரா மற்றும் அவர்களது குழுமம் இவ்விழாவில் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை ஜோசப் கண்மருத்துவமனை நிர்வாக அலுவலர்
சுபாபிரபு மற்றும் அவரது குழுவினர் செய்திருந்தனர்.
