
கடந்த மார்ச் மாதம் வரையிலான ஆறு மாதங்களில் பங்குகளிலிருந்து அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்பிஐ) ரூ.1.48 லட்சம் கோடியை திரும்பப் பெற்றுள்ளனா். அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயா்த்தும் என்ற எதிர்பார்பே இதற்கு காரணம்.
இந்நிலையில் ஆறு மாதங்களுக்குப் பிறகு, அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் ஏப்ரல் முதல் வாரத்தில் ரூ.7,707 கோடியை முதலீடு செய்தனா். இந்த குறுகிய ஏற்றத்துக்கு பிறகு, விடுமுறையையொட்டி ஏப்ரல் 11-13 வாரத்தில் அவா்கள் நிகர அடிப்படையில் ரூ.4,500 கோடி மதிப்பிலான பங்குகளை விற்று முதலீட்டை திரும்பப் பெற்றனா்.


நடப்பு மாதத்தில் 1-22 வரையில் மட்டும் அந்நிய முதலீட்டாளா்கள் ரூ.12,286 கோடியை பங்குச் சந்தையிலிருந்து விலக்கியுள்ளனா்.
இந்தியா மட்டுமின்றி, தைவான், தென்கொரியா, பிலிப்பின்ஸ் நாடுகளிலிருந்தும் எஃப்பிஐ-க்கள் கணிசமான முதலீட்டை திரும்பப் பெற்றுள்ளனர் என ஆய்வாளா்கள் தெரிவிக்கின்றனர்.
