Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

திருச்சியில் 327 மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள்!

1
2
திருச்சியில் 327 மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள்!
தமிழக அரசு 11 வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் இலவச மிதிவண்டி வழங்கி வருகிறது.
தற்போது இந்த ஆண்டிற்கான இலவச மிதிவண்டி வழங்கும் பணி துவங்கப்பட்டள்ளது.

திருச்சியில் இத்திட்டத்தில், நேற்று திருவெறும்பூா் வட்டத்திலுள்ள அரசங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 27 பேருக்கும், பொன்மலைப்பட்டி இருதய மேல்நிலைப் பள்ளியில் 145 பேருக்கும், திருவெறும்பூா் முக்குலத்தோா் மேல்நிலைப்பள்ளியில் 155 பேருக்கும் என மொத்தமாக 327 பேருக்கு ரூ.16 லட்சத்து 73 ஆயிரத்து 925  மதிப்பிலான மிதிவண்டிகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  வழங்கினாா்.

இந்நிகழ்வில்  துணை மேயா் ஜி.திவ்யா, மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவா் கே.எஸ்.எம்.கருணாநிதி,  உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

5

Leave A Reply

Your email address will not be published.