Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

திருச்சியில் குரூப்-1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு!

1

திருச்சியில் குரூப்-1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் -1 க்கான 92 பணிக்காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

4

இந்நிலையில், திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் குரூப் -1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு வருகிற 29 – ந்தேதி முதல் தொடங்குகிறது .

3
2

திருச்சி மாவட்டத்தில் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்புடைவோர் இவ்வாப்பினை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை தொடர்பு கொண்டு பெறலாம்.

போட்டித் தேர்வுகளுக்கு கல்வி தொலைக்காட்சி அலைவரிசையில் காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், இதன் மறு ஒளிபரப்பு இரவு 7 மணி முதல் 9 மணி வரையிலும் வகுப்புகள் ஒளிப்பரப்பாகும் எனவும் இதன் மூலம் தொலைதூரத்தில் வசிக்கும் இளைஞர்கள் பயனடையுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது .

மேலும் , பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான மென் பாட குறிப்புகள் , சமச்சீர் புத்தகங்களின் மென் நகல், முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் , பயிற்சி வகுப்புகளின் காணொலி காட்சிகள் ஆகியவை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மெய் நிகர் கற்றல் https://tamilnaducareerservices.tn.gov.in என்ற வலை தளத்தில் உள்ளது.  இதனை பதிவிறக்கம் செய்து பயனடை யுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இத்தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

5

Leave A Reply

Your email address will not be published.