
திருச்சியில் அரசு போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்!
திருச்சி மாவட்டத்தில் வசிக்கும் வேலைவாய்பற்ற பழங்குடியினத்தவர்கள் அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் வேலையில் சேர்வதை ஊக்குவிக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (டிஎன்.பி.எஸ்சி) நடத்தப்பட உள்ள தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் தேர்வாணையம் , ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் வங்கி போன்ற போட்டி தேர்வுகளுக்கு தயார் படுத்திக்கொள்ள திருச்சி மாவட்டம் , செம்புளிச்சாம்பட்டி கிராமத்தில் இலவச பயிற்சி ஆரம்பிக்கப்பட உள்ளது.


இப்பயிற்சி மையத்தில் மாவட்டத்தை சேர்ந்த 50 பழங்குடியின மாணவர்கள் பயிற்சி பெறலாம் . 50 பேருக்கு மேல் விண்ணப்பிக்கும் பட்சத்தில் தகுதியின் அடிப்படையிலும் , முன்னுரிமை அடிப்படையி லும் 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தொடர்ந்து 50 நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் .
இப்பயிற்சிக்கான கையேடுகள் அனைத்தும் பயிற்சி மையத்தில் உள்ளன . இப்புத்தகங்களை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணைய தகுதி தேர்விற்கு பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் இப்பயிற்சியில் கலந்து கொள்ளும் மாண வர்களுக்கு மதிய உணவு பயிற்சி மையத்திலேயே வழங்கப்படும் .
இப்பயிற்சியில் சேரவிருப்பமுள்ள பழங்குடியின இனத்தவர்கள் திருச்சி மாவட்டம் துறையூர் பழங்குடியினர் நல திட்ட அலுவலகத்தில் நேரில் வந்து விண்ணப்பிக்கலாம். திருச்சி மாவட்டத்தில் வசிக்கும் பழங்குடியின வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற ஏதுவாக இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
